இந்திய எலக்ட் ரானிக் சந்தையில் அதிக வேகத்துடன் இயங்கக் கூடிய முதல் டிவிடி ட்ரைவினை சாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ளது. எஸ்.எச்.–எஸ் 223 என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த டிரைவ் பல்வேறு பார்மட்டுகளில் வேகங்களில் தகவலைப் பதியும் திறனுடையது.
அவை: 22 எக்ஸ் டிவிடி + மைனஸ் ஆர் ரெகார்டிங், 12 எக்ஸ் டிவிடி ராம் ரெகார்டிங், 16 எக்ஸ் டிவிடி + ஆர் டூயல் லேயர் ரெகார்டிங், 12 எக்ஸ் டிவிடி மைனஸ் ஆர் டூயல் லேயர் ரெகார்டிங், 8 எக்ஸ் டிவிடி + ஆர் டபிள்யூ ரெகார்டிங் மற்றுக் 6 எக்ஸ் டிவிடி மைனஸ் ஆர் டபிள்யூ ரெகார்டிங். இதன் மூலம் இதனைப் பயன்படுத்தி 4.7 கிகாபைட் தகவல்களை 4 நிமிடம் 26 விநாடிகளில் டிவிடி + ஆர் மைனஸ் டிஸ்க்கில் பதிந்து விடலாம்.
இதே போல பல்வேறு வகை வேகத்தில் மிக வேகமாகப் பதிந்து தரும் தன்மையுடன் இந்த டிவிடி ரைட்டர் இயங்குகிறது. இது சடா (SATA) இன்டர்பேஸுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த டிரைவில் சாம்சங் நிறுவனத்தின் நிறுவன சாப்ட்வேர் தரப்படுகிறது. இதன் மூலம் சாம்சங் வழங்கும் புதிய வசதிகளை டவுண்லோட் செய்து அப்டேட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த டிரைவின் மார்க்கட் விலை ரூ. 1,700.
No comments:
Post a Comment