My Self . . .

My photo
India
Im Simple..I love makin frnds nd believe deeply in frndship nd love nd all the gud things...i want to make this world more b'ful..bt dnt knw how ?...

Friday, August 26, 2011

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

No comments:

Post a Comment