இன்று உலக இடது கையாளர்கள் தினம். நானும் இடது கையாளர் என்பதில் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
காலை கிடைத்த ஒரு குறுந்தகவல் தான் இந்த தினத்தைப் பற்றிய ஞானம் எனக்கு வழி வகுத்தது. எல்லாவற்றிற்கும் வலைத்தளம் இருப்பது போல, இடது கையாளர்கள் தினத்திற்கும் ஒரு தனி வலையே இருந்தது. அதிலிருந்தும், மற்றும் சில தளங்களிலிருந்தும் சேகரிக்கப்பட்ட சில தகவல்கள் உங்களுக்காக..
• Sinistrophobia – என்பது இடது கைப்பழக்கம் இருப்பதற்கு அல்லது இடது புறத்தில் இருக்கும் பொருட்களுக்கு பயப்படுவது
• பலருக்கும் இடது கைப்பழக்கம் இருக்கும் போதிலும், மிகவும் சிலர் மட்டுமே முழுமையான இடது கைப்பழக்கம் உள்ளவர்களாக இருப்பர்.
• இந்த தினம் முதன்முதலில் 1976 ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி அன்று தொடங்கப்பட்டது
• எல்லா போலார் கரடிக்குட்டிகளும் இடக்கை பழக்கம் உள்ளவைகளே
• இரட்டையர்கள் ஒருவர் இடது கைப்பழக்கம் உள்ளவராக இருப்பதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது
• இவர்களுக்கு தண்ணீர் அடியில் பார்த்து சுதாரித்து கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும்
• இவர்கள் டென்னிஸ், பேஸ்பால், நீச்சல் போன்ற விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதுண்டு
• கண்ணாடி எழுத்துக்கள் (அதாவது எழுத்துக்களையே திருப்பி திருப்பி எழுதுவது) இவர்களுக்கு மிகவும் எளிதாக இருக்கும்
• 3-D வடிவங்கள் எளிதில் புரியும்.
• அமேரிக்காவின் கடைசி ஆறு ஜனாதிபதிகளில் நால்வர் இடக்கை பழக்கம் உள்ளவர்கண் தான்..
• நீங்களும் இந்த பழக்கம் உள்ளவராக இருந்தால் கொண்டாடுங்கள். இது நமக்கான தினம்..
No comments:
Post a Comment