My Self . . .

My photo
India
Im Simple..I love makin frnds nd believe deeply in frndship nd love nd all the gud things...i want to make this world more b'ful..bt dnt knw how ?...

Saturday, September 03, 2011

கண்ணை உறுத்துதா டெஸ்க்டாப் ?



ஆக்டிவ் டைட்டில் பார் – சைஸ் அளவை 21க்கு மாற்றவும். கலர் 1 மற்றும் கலர் 2 – எந்த வண்ணம் உங்கள் கண்களுக்கு உறுத்தாமல் கிளேர் அடிக்காமல் இருக்குமோ அந்த வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

டிஸ்பிளே செட்டிங்ஸ் குறித்து சென்ற வாரம் வெளியிடப்பட்ட கட்டுரையைப் படித்த பின் பல வாசகர்கள் தங்கள் கம்ப்யூட்டர் திரை புது ஜொலிப்புடன் இருப்பதாக எழுதி உள்ளனர். ஆனால் பலர் தங்கள் மானிட்டரில் உள்ள சில வண்ணங்கள் கண்களை உறுத்துவதாகவும் அதனை எப்படி மாற்றுவது என்றும் கேட்டுள்ளனர்.

ஒரு சிலர் எழுத்துக்கள் சிறியதாக இருப்பதாகவும் ஏற்கனவே கண்ணாடி அணிந்தவர்களுக்கும் இது தொல்லை தருவதாகவும் எழுதி உள்ளனர். இவர்களுக்கான தகவல் குறிப்புகள் இதோ: கீழே தரப்பட்டுள்ள குறிப்புகள் மூலம் ஒரு முறை நீங்கள் டெஸ்க்டாப் செட் செய்துவிட்டால் பின் மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படாது.

1. முதலில் கிளாசிக் ஸ்டார்ட் மெனுவிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்து பின் புராபர்ட்டீஸ் பிரிவில் கிளிக் செய்திடவும்.

2. பின் ஸ்டார்ட் மெனு டேப்பில் கிளாசிக் ஸ்டார்ட் மெனு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3. ஓகே கிளிக் செய்திடவும். விண்டோஸ் எக்ஸ்பி தோற்றத்திலிருந்து விண்டோஸ் கிளாசிக் தோற்றத்திற்கு மாற்றிட:

1. டெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் (ஷார்ட் கட்களை விட்டுவிடுங்கள்) ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் பிரிவைத் தேர்ந்தெடுங்கள்.

2. டிஸ்பிளே புராபர்ட்டீஸ் விண்டோவில் தீம்ஸ் டேப் சென்று அதில் விண்டோஸ் கிளாசிக் என்ற தீமைத் தேர்ந்தெடுக்கவும்.

3. அடுத்து அப்பியரன்ஸ் டேப் செல்லவும். அதில் அட்வான்ஸ்டு பட்டனில் கிளிக் செய்திடவும்.

4. அட்வான்ஸ் அப்பியரன்ஸ் விண்டோவில் ஆக்டிவ் விண்டோ என்ற டெக்ஸ்ட்டில் கிளிக் செய்திடவும். இனி கீழ்க்காணும் மாற்றங்களை மேற்கொள்ளவும்.
ஆக்டிவ் டைட்டில் பார் – சைஸ் அளவை 21க்கு மாற்றவும்.
கலர் 1 மற்றும் கலர் 2 – எந்த வண்ணம் உங்கள் கண்களுக்கு உறுத்தாமல் கிளேர் அடிக்காமல் இருக்குமோ அந்த வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

பாண்ட் டைப்: டகோமா என்ற பாண்ட்டை தேர்ந்தெடுக்கவும். இது படிப்பதற்கு எளிதாக இருக்கும். இதன் சைஸ் 12 எனத் தேர்ந்தெடுக்கவும். ( இந்த அளவு உங்களுக்குச் சிறியதாகத் தோன்றினால் இன்னும் கொஞ்சம் அளவைக் கூட்டிக் கொள்ளலாம்.) இதன் கலர் என்பதில் கருப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

5. அடுத்த நார்மல் என்று இருக்கும் பட்டையில் உள்ள டெக்ஸ்ட் மீது கிளிக் செய்திடவும். இதில் கீழ்க்காணும் மாற்றங்களை மேற்கொள்ளவும்:

மெனு: சைஸ் 21 தேர்ந்தெடுக்கவும். கலர் 1 – என்பதில் கிரே கலரை செலக்ட் செய்திடுங்கள்.

பாண்ட் டைப்: இதில் ஏரியல் என்ற எழுத்தை தேர்ந்தெடுக்கவும். (இந்த எழுத்துவகையும் படிப்பதற்கு எளிதாக கண்ணுக்கு உறுத்தல் இல்லாமல் இருக்கும்.) சைஸ் 12 ஆகவும் கலர் கருப்பாகவும் இருக்கட்டும்.
அடுத்து மெசேஜ் டெக்ஸ்ட் என்பதில் உள்ள டெக்ஸ்ட்டில் கிளிக் செய்திடவும்.
மெனு சைஸை 21க்கு அமைக்கவும்.

இறுதியாக விண்டோஸ் டெக்ஸ்ட் என்பதில் உள்ள டெக்ஸ்ட்டில் கிளிக் செய்து கீழ்க்காணும் மாற்றங்களை ஏற்படுத்தவும்.

கலர் 1: இதில் அதர் என்பதில் கிளிக் செய்திடுங்கள். நான் இள மஞ்சள் நிறத்தைத் தேர்ந்தெடுத்தேன். உங்களுக்கு இதமான வண்ணமாக நீங்கள் தேர்ந்தெடுக்கவும்.

பேசிக் கலர்ஸ்: இதில் கறுப்பான அல்லது இருட்டான தோற்றத்தினை சிறிது குறைத்துக் காட்டுவதற்காக மஞ்சள் நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு படத்தில் உள்ளது போல ஸ்கிரீன் தோற்றத்தில் வலது பக்கத்தில் இடது புறமாகச் சாய்ந்த அம்புக்குறியினைப் பார்த்தீர்களா? இந்த அம்புக் குறியில் கிளிக் செய்து அப்படியே மேலேயும் கீழேயும் இழுக்கவும். எந்த இடத்தில் உள்ள மஞ்சள் நிறம் கண்களுக்கு இதமாக இருக்கிறதோ அந்த இடத்தில் நிறுத்தவும்.

உங்களுக்கு இருட்டாக இருப்பதே இதம் என்றால் அம்புக் குறியை கீழே கீழே கொண்டு வரவும். ஓகே, இந்த செலக்ஷனை முடித்தபின் மீண்டும் தீம் டேபிற் குச் செலவும். சேவ் அஸ் பட்டனைக் கிளிக் செய்து பின் சேவ் பட்டனை கிளிக் செய்திடவும். அடுத்து விண்டோஸ் நீங்கள் மேற்கொண்ட மாற் றங்களை அமல்படுத்தும் வரை காத்திருக்கவும்.

இப்போது மாற்றங்களை அமைத்தாயிற்று. இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். உங்கள் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலானா செட்டிங்ஸோடு புதிய தோற்றத்தில் விண்டோஸ் உங்களுக்குக் காட்சி அளிக்கும்.

விண்டோஸின் தொல்லைகள்



விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முற்றிலும் முழுமையான பாதுகாப்பான சிஸ்டம் இல்லை என்பது கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். பல வேளைகளில் தேவையற்ற தொல்லைகளை விண்டோஸ் அளித்திடும். சில வேளைகளில் அவை சிறுவர்களின் சில்மிஷங்கள் போல் தோற்றமளித்திடும். இருந்தும் வேறு வழியின்றி அவற்றைப் பொறுத்துக் கொள்வோம். எடுத்துக் காட்டாக நாம் மறதியாய் ஒரு பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் விட்டிருப்போம்.

அடுத்த முறை விண்டோஸை இயக்கும்போது NonSystem Disk or disk error

இருந்தாலும் இது ஒரு தொல்லை தானே. இப்படி விண்டோஸ் கொடுக்கும் தொல்லைகள் சிலவற்றையும் அவை எதனால் ஏற்படுகிறது என்பதனையும் அவற்றை எப்படி சமாளிக்கலாம் என்பதனையும் இங்கு காணலாம்.

1. நகராத மவுஸ் கர்சர்: திடீரென கம்ப்யூட்டர் இயக்கம் உறைந்து போகும். மவுஸ் கர்சர் நகராது. என்ன செய்தாலும் ஒன்றும் இயங்காது. கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் அழுத்தினாலும் ஒன்றும் இயங்காது. வேறு வழியின்றி ரீ பூட் பட்டனை அழுத்தி மீண்டும் இயங்க வைப்போம். இதற்கு என்ன காரணம்? பெரும்பாலும் நீங்கள் புதியதாக கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த புரோகிராமாக இருக்கும். எனவே மீண்டும் கம்ப்யூட்டரை ரீ பூட் செய்தவுடன் கடைசியாக இன்ஸ்டால் செய்த புரோகிராமினை அன் இன்ஸ்டால் மூலம் நீக்கவும். மீண்டும் அதே உறையும் பிரச்னை வரவில்லை என்றால் இந்த புரோகிராம் காரணமாக இருக்கலாம். இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் வயர்லெஸ் மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் மவுஸின் பேட்டரி உயிருடன் இருக்கிறதா என்று பார்க்கவும்.பேட்டரியை மாற்றிப் பார்க்கவும். ஒரு வேளை மவுஸ் கர்சர் நகரலாம்.

2. திடீரென ரீஸ்டார்ட்: பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே திடீரென கம்ப்யூட்டர் தானே ரீஸ்டார்ட் ஆகும். கம்ப்யூட்டர் திரை கருப்பாக தோன்றி விண்டோஸை எவ்வாறு ஸ்டார்ட் செய்திட என்ற கேள்வியுடன் நான்கு ஆப்ஷன்ஸ் தரப்படும். அங்கு Start Windows Normally என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். கம்ப்யூட்டர் வழக்கம்போல இயங்கத் தொடங்குகிறதா என்று பார்க்கவும். தொடங்கவில்லை என்றால் Last Known good configuration என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதுவும் சரியாகவில்லை என்றால் Safe Mode ல் தொடங்கவும். இது நிச்சயம் செயல்படத் தொடங்கும். இதனைப் பயன்படுத்தி முன்பு சொன்னது போல இறுதியாக இன்ஸ்டால் செய்த புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடவும்.

3. தொடக்கத்தில் சொன்ன NonSystem Disk or disk error என்ற பிரச்னை ஏற்படுகையில் டிரைவில் உள்ள டிஸ்க்கினை நீக்கினாலும் சில வேளைகளில் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது. அப்படி என்றால் பிரச்னை மிகவும் சிக்கலானது தான். கம்ப்யூட்டரின் சிபியு கேபினைக் கழற்றி ஏதேனும் கேபிள் வயர் சரியாக இணைக்கப்படாமல் இருக்கிறதா என்று பார்க்கவும். குறிப்பாக ஹார்ட் டிஸ்க்கிற்குச் செல்லும் கேபிள் சரியாக இருக்கிறதா எனப் பார்க்கவும். அதனைச் சரி செய்தும் பிரச்னை தீரவில்லை என்றால் ஒரு ஹார்ட் வேர் டெக்னீஷியனை அழைத்துப் பார்க்கவும்.

4. One of your disks needs to be checked for consistency : கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கும்போது இந்த செய்தி திரை முழுவதும் ஊதா வண்ணத்தில் வெள்ளை எழுத்துக்களில் தோன்றும். இந்த செய்தி வந்தால் அதற்கு முன் கம்ப்யூட்டரை இயக்கிய போது முறையாக அதன் இயக்கத்தினை நிறுத்தவில்லை என்று பொருள். அல்லது புரோகிராம் கிராஷ் ஏற்பட்டிருக்கலாம். அல்லது பவர் கட் ஆகி யு.பி.எஸ். கை கொடுக்காமல் கம்ப்யூட்டர் ஆப் ஆகி இருக்கலாம். இது போன்ற செய்திவந்து உங்கள் டிஸ்க்கைச் சோதிக்கும் பணி தொடங்கினால் அதனை நிறுத்த வேண்டாம். ஒரு சில நிமிடங்களில் இந்த சோதனை முடிந்து கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும். இது உங்கள் ஹார்ட் டிஸ்க் சரியாக உள்ளதா என்ற சோதனை என்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கும் நல்லதுதான்.

ஆனால் ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கும் போதும் இந்த செய்தி வந்தால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை நீங்கள் ஷட் டவுண் செய்திட நடவடிக்கைகள் எடுக்கையில் பின்புலத்தில் ஏதோ ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள். எனவே ஷட் டவுண்ட் செய்வதற்கு முன்னால் கண்ட்ரோல் + ஆல்ட்+டெலீட் போட்டு எந்த எந்த புரோகிராம்கள் நீங்கள் அறியாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று பார்த்து அவற்றை நிறுத்தவும். அவை மீண்டும் தாமாக இயங்குவதனை நிறுத்தவும்.

5. Blue Screen of Death: ஆம், இப்படி ஒரு திரை நம் கம்ப்யூட்டரில் சில வேளைகளில் ஏற்படும். A fatal exception 0E has occurred என்று தொடங்கி அப்போது இயங்கிய அப்ளிகேஷன் புரோகிராமினை உடனே முடக்கிவிடு என்று கேட்கும். கண்ட்ரோல் + ஆல்ட்+டெலீட் கொடுத்து கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடச் சொல்லும். "நீங்கள் சேவ் செய்யாத தகவல் எல்லாம் அவ்வளவுதான் அம்போ' என்று ஒரு மிரட்டும் செய்தியும் வரும். என்ன செய்வது? வேறு வழியே இல்லை. போனால் போகட்டும் போடா ! என்று மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதுதான். இந்த டெத் ஸ்கிரீன் அடிக்கடி வந்ததென்றால் ரெஸ்டோர் பயன்படுத்தி முந்தைய ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குச் செல்ல வேண்டியதுதான். இதனைப் பெற Start, Accessories, System Tools, System Restore என வரிசையாகச் சென்று பெறலாம்.

6. End Program: சின்ன விண்டோ ஒன்றில் This program ‘Program has encountered a problem’ is not responding போன்ற பிழைச் செய்தி கிடைக்கும். புரோகிராமில் எந்த பிரச்னையும் இல்லை என உறுதியாகத் தெரிந்தால் தொடர்ந்து அதனை இயக்கப் பார்க்கவும். ஆனால் ஏற்கனவே கம்ப்யூட்டர் முடங்கிப் போயிருந்தால் வேறு வழியின்றி புரோகிராமை மூடி வெளியேறி பின் மீண்டும் வரவும்.

7.‘Program has encountered a problem and needs to close’: அடிக்கடி கிராஷ் ஆகும் புரோகிராம்கள் இது போன்ற செய்தியைக் கொடுக்கும். இதை நீங்கள் ஒன்றும் செய்திட முடியாது. ஏனென்றால் ஏற்கனவே புரோகிராம் கிராஷ் ஆகிவிட்டது. இதில் Send Error Report என்ற பிரிவில் கிளிக் செய்து இன்டர்நெட் இணைப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பிழைச் செய்தி குறித்து தகவல் அனுப்பலாம். ஆனால் ஒரு சில சமயங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளத்திலிருந்து இந்த பிழை புராசசர் சிப்பினால் ஏற்பட்டது. இதற்கு இன்னும் நிவாரணம் இல்லை என்ற பதிலும் வரலாம்.

8. மெதுவாக இயங்குதல்: கம்ப்யூட்டர் வாங்கிய தொடக்கத்தில் மிக வேகமாக இயங்கிய கம்ப்யூட்டர் சில மாதங்களிலேயே மெதுவாக இயக்கத்திற்கு வரும். சி.பி.யு. பட்டனை அழுத்திய பின் விண்டோஸ் டெஸ்க்டாப் வர அதிக நேரம் பிடிக்கலாம். இதற்குக் காரணம் ஸ்டார்ட் அப் மெனுவில் நிறைய புரோகிராம்களை அமைத்திருப்பதுதான். இதனை எளிதாக சரி செய்துவிடலாம். இதற்கு ஸ்டார்ட் கிளிக் செய்து பின் ரன் விண்டோவில் msconfig என டைப் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Starup டேப்பினைத் தேர்ந்தெடுத்து வரும் விண்டோவைப் பார்க்கவும்.

அதில் உள்ள புரோகிராம் பட்டியலைப் பார்க்கவும். உங்கள் கம்ப்யூட்டர் அத்தனை புரோகிராம்களையும் தொடங்கி பின்னணியில் இயங்கிய பின்னரே உங்களுக்கு டெஸ்க் டாப்பைக் காட்டுகிறது. எனவே எந்த எந்த புரோகிராம் உங்களுக்குத் தேவையில்லையோ அவற்றை ஸ்டார்ட் அப் பட்டியலில் இருந்து நீக்கிவிடவும். இதற்கு அந்த புரோகிராமின் முன் உள்ள சிறிய கட்டத்தில் இருந்த டிக் அடையாளத்தை எடுத்துவிட்டால் போதும்.

9. Access Denied: இந்த பிழைச் செய்தி ஒரு குறிப்பிட்ட பைலை நோக்கி காட்டப்படும். ஒரு பைலில் திருத்தங்கள் செய்திட முயன்று அவற்றை சேவ் செய்திட முயற்சிக்கையில் இந்த பிழைச் செய்தி கிடைக்கும். பைல் அது போல மாற்றங்களை மேற்கொள்ளவிடாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனை எளிதாக ஏமாற்றலாம். குச்திஞு அண் கட்டளை கொடுத்து வேறு பெயரில் சேவ் செய்திடலாம்.

10. Missing Shortcut: சில புரோகிராம்களை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கும்போது டெஸ்க்டாப்பிலிருக்கும் ஷார்ட்கட் ஐகானும் நீக்கப்பட வேண்டும். சில வேளைகளில் அந்த ஷார்ட் கட் ஐகான் காட்டும் புரோகிராமினை வேறுடிரைவிற்கு மாற்றி இருப்போம். அப்போது இந்த பிழைச் செய்தி காட்டப்பட்டு Windows is searching for [File Name] To locate the file yourself click Browse என்ற செய்தி கிடைக்கும். புரோகிராம் நீக்கப்பட்டுவிட்டது என்று தெரிந்தால் இந்த ஷார்ட் கட் ஐகானையும் நீக்கிவிடுங்கள்.

11. "Can’t Boot from Windows CD”: விண்டோஸ் தொகுப்பினை ரிப்பேர், ரீ இன்ஸ்டால் அல்லது அப்கிரேட் செய்ய வேண்டியதிருந்தால் கம்ப்யூட்டரை விண்டோஸ் சிஸ்டம் சிடியிலிருது பூட் செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் அப்படி பூட் செய்திட முயற்சிக்கையில் இந்த செய்தி வரும். ஏன்? சிடியிலிருந்து பூட் செய்திட வகுத்திடும் வழி அடைக்கப்பட்டிருக்கும். இதனை எப்படி திறப்பது? விண்டோஸ் இயங்கத் தொடங்குகையில் Delete பட்டனை அழுத்தவும். BIOS ஸ்கிரீன் தோன்றும். அப்படித் தோன்றவில்லை என்றால் டெலீட் கீக்குப் பதிலாக F2 கீயை அழுத்தவும்.

கர்சர் கீ மூலம் பூட் செக்ஷன் சென்று என்டர் அழுத்தவும். உடன் கம்ப்யூட்டர் பூட் செய்ய எந்த வரிசையில் செயல்பட வேண்டும் என்ற வரிசை கிடைக்கும். நீங்கள் முதலில் சிடி, பின் ஹார்ட் டிஸ்க் வழியாக என்றால் அதற்கேற்ப வரிசையினை மாற்றி அமைக்கவும். வேறு எதனையும் மாற்ற வேண்டாம். இந்த மாற்றத்தை சேவ் செய்து வெளியேறி விண்டோஸ் சிடியை டிரைவில் போட்டு பின் பூட் செய்தால் கம்ப்யூட்டர் சிடி டிரைவில் உள்ள விண்டோஸ் சிடி வழியாக பூட் ஆகும்.

12. டாஸ்க் பார் பட்டனில் புரோகிராம்கள் அடுக்கு: சில வேளைகளில் ஒரே புரோகிராம்களில் பல திறக்கப்படுகையில் அவைடாஸ்க் பாரில் ஒரு பட்டனில் அடுக்கப்படும். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப்பில் பல டாகுமெண்ட்டுகள் திறக்கப்பட்டால் அவை வேர்ட் என்ற பட்டனிலேயே அடுக்கப்படும். எத்தனை புரோகிராம்கள் உள்ளன என்று எண் காட்டப்படும். இவற்றில் ஏதேனும் ஒன்றைத் திறந்து பயன்படுத்த எண்ணினால் பட்டனைக் கிளிக் செய்து பின் கிடைக்கும் அடுக்கில் நாம் விரும்பும் புரோகிராமினை கிளிக் செய்து இயக்க வேண்டும். இது நேரம் எடுக்கும் வேலை. டாஸ்க்பாரில் ஒவ்வொரு டாகுமெண்ட்டும் காட்டப் பட்டால் இந்த வேலை மிச்சமாகும். என்ன செய்யலாம்? டாஸ்க் பாரில் எங்கேனும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Group similar Taskbar buttons என்ற இடத்தில் டிக் அடையாளத்தை எடுத்து விடுங்கள். இனி பைல்கள் அடுக்கப்பட மாட்டாது.

13. Low Disk space warning: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் திடீரென திரையில் வலது மூலையில் ஹார்ட் டிஸ்க்கில் இனி ஸ்பேஸ் இல்லை என்ற பொருள் பட இந்த செய்தி கிடைக்கும். இதனால் பெரிய விபத்து இல்லை. உடனே சி டிரைவில் தேவையற்ற பைல்கள், டெம்பரரி போல்டரில் உள்ள பைல்கள் ஆகியவற்றைக் காலி செய்யவும். முக்கிய பைல்கள் இருந்தால் அவற்றை வேறு டிரைவிற்கு மாற்றவும். இவ்வாறு செய்து ஓரளவிற்கு டிஸ்க்கில் ஸ்பேஸ் உண்டாக்கினால் இந்த எச்சரிக்கை செய்தி வராது.

ஆன்லைன் ஸ்டோர் ரூம்


மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவ் என்ற வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. பாஸ்வேர்ட் மூலம் பைல்களைப் பாதுகாத்து அவற்றை ஆன்லைனில் ஸ்டோர் செய்து வைக்கலாம். இதனால் உலகின் எந்த மூலையில் இருந்தும் நம் பைல்களை இறக்கிப் பயன்படுத்தலாம். அப்படி என்றால் நம் பைல்களை அடுத்தவர்கள் எடுத்துப் பார்த்துவிடுவார்களே என்ற அச்சம் ஏற்படுகிறதா? அல்லது இவ்வாறு வைத்திடும் சில பைல்களை நான் மட்டுமே பார்க்க வேண்டும்;

சில பைல்களை என் உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பார்க்க வேண்டும்; மற்றவற்றை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று எண்ணுகிறீர்களா? உங்களுக்காகவே மைக்ரோசாப்ட் இந்த மூன்று வகைகளிலும் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கும் வசதியைத் தருகிறது.

Personal Folder என்ற பிரிவில் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்ட பைல்களை தனிநபர் பயன்பாட்டிற்கு மட்டும் என ஒதுக்கி வைத்துப் பயன்படுத்தலாம். Shared பிரிவில் பைல்களை அடுக்கி வைப்பவர்கள் தாங்கள் விரும்பும் நபர்கள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் அமைக்கலாம். Public என்ற பிரிவில் அனைவரும் பார்த்துப் பயன்படுத்தக் கூடிய ஷேர்வேர் பைல்களை வைக்கலாம். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவ் 5 ஜிபி அளவிலான இடத்தை அளிக்கிறது. இந்த இடத்தில் 1000 பாடல்கள், 30 ஆயிரம் டாகுமெண்ட்கள், 30 ஆயிரம் டிஜிட்டல் படங்களை வைக்கலாம். ஒரு பைலின் அளவு 50 எம்பிக்கும் மேல் இருக்கக் கூடாது.

இந்தியாவில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படுகிறது. அவர்கள் விண்டோஸ் லைவ் ஐ.டி. மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்த பைல்களை பயன்படுத்தலாம். அளவில்லாமல் பைல்களை கடிதங்களுடன் வைத்துக் கொள்ள இமெயில் தளங்கள் இருக்கும் போது இத்தகைய வசதி மக்களிடையே எடுபடுமா? என்ற சந்தேகத்துடன், இந்த கேள்வியை விண்டோஸ் லைவ் இந்தியா வர்த்தகப் பிரிவு தலைவர் சமீர் சரையா வைக் கேட்டபோது "இந்த வசதியின் மூலம் ஒருவர் தன் நண்பர்களுடனும் நெட்டில் உலாவரும் எவருடனும் தன் பைல்களைத் தேர்ந்தெடுத்து பகிர்ந்து கொள்ளலாம். இது இமெயில் அக்கவுண்ட் மூலம் முடியாது. உலக அளவில் 40 கோடி பேர் விண்டோஸ் லைவ் சர்வீஸைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் இன்டர்நெட் மையங்களில் என்ன மாதிரியான பைல் டவுண் லோட் களில் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வு செய்த பின்னரே இந்த வசதியை வகைப்படுத்தி' வழங்க முன்வந்தோம்' என்று கூறினார். உங்களிடம் விண்டோஸ் லைவ், ஹாட் மெயில், மைக்ரோசாப்ட் பாஸ்போர்ட் இருந்தால் அதன் மூலம் இந்த விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவை அதில் பதிந்திடாமலேயே பயன்படுத்தலாம். இது போன்ற வசதிகள் சில புராஜக்ட் தயாரிப்பில் ஈடுபடும் மாணவர்கள் குழுவினருக்கு பயன்படும். அவர்களுக்குள் குழுவாக பைல்களைப் பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ள இது ஒரு நல்ல வசதி. மற்றவர்களும் தங்களைப் பற்றிய பெர்சனல் தகவல்களை அடுத்தவர் அறியாமல் அதே நேரத்தில் தாங்கள் எண்ணிய போதெல்லாம் பயன்படுத்த பைல்களைப் பத்திரமாகப் பாதுகாக்கும் தள வசதியாக இது பயன்படும்.

பைலுக்கு பாஸ்வேர்ட் கொடுக்கலாம்!


ஒரு டாகுமெண்ட் பைலை நீங்கள் மட்டுமே படிக்கும் படி அமைக்கலாம். இதற்கு பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டும். பாஸ்வேர்ட் கொடுத்த பின் அந்த பாஸ்வேர்டைச் சரியாகக் கொடுத்தால் தான் டாகுமெண்ட் திறக்கும். பாஸ்வேர்டைச் சரியாகக் கொடுக்க வில்லை என்றால் அல்லது பாஸ்வேர்ட் மறந்துவிட்டால் அந்த டாகுமெண்ட்டை மறந்துவிட வேண்டியதுதான். எனவே நன்றாக யோசித்து முடிவெடுத்து பாஸ்வேர்ட் கொடுத்து டாகுமெண்ட்டை பாதுகாக்கவும்.

டாகுமெண்ட் ஒன்றுக்கு பாஸ்வேர்ட் கொடுக்க டாகுமெண்ட்டைத் திறந்து பின் “Save As” என்ற பிரிவினை File மெனுவில் தேர்ந்தெடுக்கவும். சேவ் அஸ் டயலாக் பாக்ஸில் “Tools” பட்டனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் மெனுவில் “General Options” என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது “Save” டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் பாஸ்வேர்ட் அமைத்திடத் தேவையான டயலாக் பாக்ஸ் கிடைக்கும். முதல் பாஸ்வேர்டை Password to open டெக்ஸ்ட் பாக்ஸில் அமைக்கவும். பின்னர் “Password to modify” என்ற பாக்ஸில் இரண்டாவது பாஸ்வேர்டை அமைக்கவும்.

பின் டயலாக் பாக்ஸின் ஓகே பட்டனைக் கிளிக் செய்திடவும். பின் வேர்ட் “Password to modify” என்ற டயலாக் பாக்ஸை பாஸ்வேர்டுகளை உறுதி செய்திடத் திறக்கும். ஒரு பாஸ்வேர்டின் அதிக பட்ச நீளம் 15 கேரக்டர்கள் மட்டுமே. மீண்டும் டாகுமெண்ட்டைத் திறக்கவும் டாகுமெண்ட்டை எடிட் செய்திடவும் அமைத்த பாஸ்வேர்டுகளைத் தவறின்றி அமைக்கவும். பின் டயலாக் பாக்ஸை ஒன்றன் பின் ஒன்றாக ஓகே கிளிக் செய்து மூடவும். அதன்பின் சேவ் அஸ் டயலாக் பாக்ஸில் உள்ள சேவ் பட்டனை அழுத்தி வெளியேறவும். இனி டாகுமெண்ட்டைத் திறந்து படிக்க ஒரு பாஸ்வேர்டும் அதில் மாற்றங்களை ஏற்படுத்த ஒரு டயலாக் பாக்ஸும் தந்தால் மட்டுமே டாகுமெண்ட் கிடைக்கும்.

சிடிக்களை கையாளும் முறை!



கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒருவருக்கு விதம் விதமாக புதிய கோணங்களில் இருந்தெல்லாம் பிரச்னைகள் வரும். அதில் ஒன்று டிரைவிலிருந்து சிடி வெளியே வராமல் இருப்பது. வேலையை முடித்து டேட்டாவை சிடியில் எழுதி பின் சிடியை வெளியே எடுத்து அடுத்த பணிக்குச் செல்லலாம் என்று திட்டமிடுகையில் சிடி வெளியே வரவில்லை என்றால் நமக்கு வரும் கோபம், எரிச்சல் நிச்சயம் நம்மையே அழித்துவிடும். எனவே இந்த சூழ்நிலையில் என்ன செய்யலாம்? ஏன் இந்நிலை ஏற்படுகிறது என்று பார்ப்போம்.

1. முதலில் இன்னொரு பைலை அந்த சிடியில் எழுதிப் பாருங்கள். ஏற்கனவே எழுதிய பைல் பார்மட்டில் இல்லாமல் வேறு வகை பார்மட்டில் எழுதிய பைலை காப்பி செய்து பாருங்கள். காப்பி ஆனவுடன் வெளியே வரலாம்.

2. எப்போதும் சிடி ஒன்றை டிரைவில் போட்டு அதிலிருந்து பைலைப் படிக்கும் வேலை அல்லது எழுதும் வேலை முடிந்துவிட்டதா? உடனே அதனை எடுத்துவிடுங்கள். வேறொரு புரோகிராமினைத் திறந்து செயல்பட முனையும் போது அதனால் சிக்கல் ஏற்பட்டு அது சிடியைச் சிக்க வைக்கலாம். அது போலவே சிடி எழுதுவதற்கான நீரோ போன்ற புரோகிராம்களில் சிடியில் எழுதி முடித்தவுடன் சிடியை வெளியே தள்ளும் வகையில் செட் செய்திட வசதி இருக்கும். அவ்வாறே செட் செய்வது நல்லது.

3. வர மறுக்கும் சிடியை எடுக்க இன்னொரு சிறந்த வழி கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வதாகும். இதனால் சிடி வெளியே வரும் வாய்ப்புண்டு.

4. மை கம்ப்யூட்டரை கிளிக் செய்து அதில் கிடைக்கும் விண்டோவில் சிடி டிரைவிற்கான இடத்தில் ரைட் கிளிக் செய்து அதில் Eject என்பதில் கிளிக் செய்து பார்க்கலாம். இதில் ஒரு முறை கிளிக் செய்தால் மட்டும் போதாது. பல முறை கிளிக் செய்தால் ஏற்படும் கட்டளைத் திணிப்பில் டிரைவ் வெளியே வரலாம்.

5. இத்தனை வழிகளையும் கையாண்டு வெளியே வரவில்லை என்றால் இறுதியாக நம் பலத்தை பிரயோகிக்க வேண்டியதுதான். அது ஒன்றுமில்லை; ஒரு சிறிய பேப்பர் கிளிப் என்ற ஜெம் கிளிப்பைப் பிரித்து நீட்டி டிரைவின் கதவில் தெரியும் சிறிய துவாரத்தில் மெதுவாகச் செருகவும். ஒரு இடத்தில் எதிராக ஒரு சிறிய தடுப்பில் நிற்கும். அதனை மெதுவாக அழுத்தினால் கதவு திறக்கப்படும். பின் சிடியை எடுத்துவிடலாம்.

6. சிடியைச் சரியாக அதன் டிரைவில் பொருத்தவில்லை என்றால் அது உள்ளே செல்லாமல் மீண்டும் மீண்டும் அதன் கதவு திறக்கப்படும். நாம் டிரைவின் கதவு மூடப்படுவதில்தான் பிரச்னை என்று முடிவு செய்து பலத்தைப் பயன்படுத்தி கதவை மூடக் கூடாது. பொறுமையாக என்ன பிரச்னை என்று ஆய்வு செய்திட வேண்டும். அதன் முதலாவது செயல்தான் சிடியைச் சரியாக அதன் இடத்தில் வைப்பது. சிறிய அளவில் அது சரியாக இல்லை என்றால் அதன் உள்ளாக மோட்டார் ஸ்டெம் உட்காருகையில் அது தானே சரி செய்யப்படும். அப்படி சரி செய்திட முடியாத பட்சத்தில் சிடி டிரைவின் செயல்பாட்டில் மாறுதல் ஏற்படும். சரியாக இயங்காது. இதைப் போன்ற சூழ்நிலைகளில் சிடிக்கள் சில நொறுங்கிப் போன நிகழ்வுகளும் நடந்தது உண்டு.

7.எனவே ஒரு சிடி டிரைவ் சரியாக இயங்கவில்லை என்றால் நாம் அதனைப் பயன்படுத்தும் முறைதான் சரியில்லை என்று பொருள். எனவே கம்ப்யூட்டரின் மீது கோபப்படுவதனை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அதனைச் சரியாக இயக்க முயற்சிக்க வேண்டும்.

8. சில வேளைகளில் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு ஒரு சிடியின் மீது இன்னொரு சிடியை போட்டு இயக்க முயற்சிப்பது; சிடியை தலைகீழாக வைத்து இயக்க முயற்சிப்பது; ஒரு சிடி என்று எண்ணிக் கொண்டு இரண்டு சிடிக்களை டிரைவில் வைப்பது போன்ற நிகழ்வுகள் நீங்களை நம்பாமல் இருக்கலாம். ஆனால் பல வேளைகளில் இவ்வாறு நடந்துள்ளது. நீங்களும் இந்த தவற்றை என்றாவது அவசரத்தில் செய்ய முற்படலாம். அவ்வாறு நேர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ளவே இந்த எச்சரிக்கை தரப்படுகிறது.

9.சிடிக்கள் டேட்டாவினைப் பதிந்து வைத்திட நம்பகமான மீடியம் என்றாலும் அவையும் என்றாவது ஒரு நாள் அல்லது ஒரு வேளையில் பயன்படுத்த முடியாமல் போகலாம். எனவே சிடியில் டேட்டாக்களை எழுதி விட்டோமே என்று அந்த பைல்களை முற்றிலுமாக அழித்துவிடக் கூடாது. வேறு ஒரு மீடியத்தில் எழுதி வைக்கலாம். இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது ஹார்ட் டிஸ்க்கின் இன்னொரு டிரைவில் போட்டு வைக்கலாம். இவ்வாறு பேக்கப் எடுத்து வைப்பது நல்லது.

10.பயன்படுத்த நல்ல தரமான நிறுவனங்கள் தயாரித்து வழங்கும் சிடிக்களையே வாங்க வேண்டும். விலை குறைவாக இருக்கிறது என்று தரம் குறைந்த சிடிக்களை வாங்கிப் பயன்படுத்துவது தவறு.

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் ஹெடர் புட்டர்



அழகான ஸ்லைடுகளைக் கொண்டு அருமையான ஒரு பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனை அமைக்கிறீர்கள். இதில் சில குறிப்புகள் ஒவ்வொரு ஸ்லைடிலும் வர வேண்டும் என திட்டமிடுகிறீர்கள். எடுத்துக் காட்டாக பிரசன்டேஷன் யாருக்காக யாரால் தரப்படுகிறது என்ற தகவல்; அல்லது நாள், குறிப்புகள் என இவை பலவகைப்படும். இவற்றை டாகுமெண்ட்டுகளில் இணைப்பது போல ஹெடர் புட்டர்களில் அமைக்கலாம்.

ஆம், பிரசன்டேஷன் ஸ்லைடுகளிலும் இவற்றை அமைக்கலாம். இதற்கு முதலில் View மெனுவிலிருந்து “Header and Footer” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் “Header and Footer” என்ற தலைப்பில் திறக்கப்படும். இதில் உள்ள டேப்களில் “Slide” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். தேதி மற்றும் நேரத்தை இங்கு அமைப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் “Fixed” மற்றும் “Date and time” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதில் “Include on slide” என்ற பிரிவில் Update automatically Date and time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

ஸ்லைட்களுக்கு எண்களைச் சேர்ப்பதாக இருந்தால் “Slide number” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.புட்டரில் ஏதேனும் சேர்ப்பதாக இருந்தால் Footer செக்பாக்ஸைத் தேர்ந்தெடுத்து ஸ்லைட் புட்டரில் என்ன இருக்க வேண்டும் எனத் திட்டமிடுகிறீர்களோ அதனை டைப் செய்திடவும். பின் Apply பட்டனைக் கிளிக் செய்து வெளியேறவும். “Notes and Handouts” என்ற டேப் அழுத்திக் கிடைக்கும் விண்டோவில் இங்கு “Header” என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். இங்கும் “Date and time” அமைக்கலாம். புட்டர் ஆப்ஷன்களையும் அமைக்கலாம். அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் “Apply to All” என்பதனைக் கிளிக் செய்து ஓகே அழுத்தி வெளியேறவும்.

எக்ஸெல் டிப்ஸ்!



எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தி கீழாக பல வரிசைகளைத் தாண்டி வந்துவிட்டீர்கள். நீங்கள் முதலில் பார்த்துக் கொண்டிருந்த வரிசைகளெல்லாம் உங்கள் பார்வையிலிருந்து மறந்துவிட்டன. அப்போது ஒரு ஆரோ கீயை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது? நீங்கள் முதலில் எங்கு இருந்தீர்களோ அங்கு இருந்த செல்லுக்கு அருகே இருக்கிறீர்கள்.

இங்கு என்ன நடக்கிறது? முதலில் ஸ்குரோல் வீலைச் சுழற்றுகையில் கண் முன் இருந்த செல்களெல்லாம் காணாமல் போய் நூறு வரிசை தாண்டி எங்கோ போகிறீர்கள். பின் எப்படி முன்பு இருந்த இடத்திற்கு வருகிறீர்கள்? அதிர்ச்சி அடையாதீர்கள். இங்கு எதுவும் உங்கள் கண் பார்வையில் இருந்து மறைந்துவிடவில்லை.

அல்லது கண்களுக்கு மாயத் தோற்றம் எதுவும் தோன்றவில்லை. ஸ்குரோல் பார் அல்லது மவுஸ் வீல் கொண்டு ஸ்குரோல் செய்திடுகையில் நீங்கள் புதிய செல் எதனையும் தேர்ந்தெடுக்கவில்லை. ஸ்கிரீனில் உள்ள தோற்றம் தான் மாறுகிறது. இதனால் தான் நீங்கள் ஆரோ கீயை அழுத்தியவுடன் முன்பு எங்கிருந்தீர்களோ அந்த வரிசைக்கு அருகேயுள்ள வரிசையில் கர்சருடன் இருக்கிறீர்கள். இதில் நமக்கு ஒரு அனுகூலம் உள்ளது. நாம் செயலாற்றும் செல் அருகே இருந்து கொண்டு ஒர்க் ஷீட் முழுவதும் ஒரு பயணம் செய்து எது எங்கே இருக்கிறது என்று அறிந்து கொண்டு மீண்டும் இருந்த இடத்திற்கே வரலாம்.

ஒரே நேரத்தில் பல செல்களில் டேட்டா: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சில வேளைகளில் ஒரே டேட்டாவினை சில குறிப்பிட்ட செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். அப்போது என்ன செய்கிறோம். பெரும்பாலானோர் ஒரு செல்லில் டேட்டாவை டைப் செய்து விட்டு பின் அதனை காப்பி செய்து அதன்பிறகு எந்த எந்த செல்களில் எல்லாம் பேஸ்ட் செய்திட வேண்டுமோ அந்த செல்களில் பேஸ்ட் செய்வார்கள். இது சிரமம் தரும் செயல்தான். ஆனால் வேறு வழி? இருக்கிறது. எக்ஸெல் அதற்கான மிக மிக எளிய வழி ஒன்றை வைத்துள்ளது. முதலில் எந்த எந்த செல்களில் எல்லாம் குறிப்பிட்ட ஒரே டேட்டாவை அமைக்க வேண்டுமோ அதனை எல்லாம் தேர்ந்தெடுக்கவும்.

இந்த செல்கள் எல்லாம் அடுத்தடுத்து இல்லாமல் இருக்கலாம். எனவே இவற்றைத் தேர்ந்தெடுக்கையில் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறு தேர்ந்தெடுக்கவும். அனைத்தும் தேர்ந்தெடுத்த பின் இப்போது டேட்டாவை டைப் செய்தாக வேண்டும் அல்லவா? அவசரப்பட வேண்டாம். என்டர் கீ அழுத்த வேண்டாம். டேட்டாவை ஏதேனும் ஒரு செல்லில் டைப் செய்துவிடுங்கள். பின்னர் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு என்டர் தட்டுங்கள். ஆஹா! தேர்ந்தெடுத்த செல்களில் எல்லாம் டேட்டா டைப் ஆகிவிட்டதே என்று ஆச்சரியப்படுகிறீர்களா! கம்ப்யூட்டர் என்றைக்குமே நம் வேலையை எளிதாக்கும் சாதனம்தான்.

செல்லின் அகலம்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் பணியாற்றுகையில் செல் ஒன்றின் அகலத்தை கூட்டுவதும் குறைப்பதுவுமாக இருப்போம், இல்லையா? சில நேரங்களில் செல் ஒன்றின் அகலத்திலேயே இன்னொரு செல்லை அமைக்க முயற்சி செய்வோம். இதற்கு எக்ஸெல் மெனுக்கள் ஒரு வழியும் கொண்டுள்ளன. Format மெனு சென்று அதில் Column என்ற மெனுவினைப் பெற்று அதில் Width என்ற பிரிவில் Column த்திற்குத் தேவைப்படும் அகலத்தினை அமைப்போம். ஆனால் குறிப்பிட்ட Column எந்த அகலத்தில் இருக்க வேண்டும் என நாம் முன்பே முடிவு செய்திருக்க வேண்டுமே; அதனை எப்படி முடிவு செய்வது? இதற்கான வழி Column ஒன்றின் அகலத்தை மட்டும் காப்பி செய்து அதனை இன்னொரு செல் மீது அமைப்பது. அது எப்படி அகலத்தை மட்டும் காப்பி செய்வது? என்ற வியப்பு வருகிறதா! இதோ பார்ப்போம்.

முதலில் நீங்கள் விரும்பும் அகலத்தில் உள்ள செல்லைத் தேர்ந்தெடுங்கள். இதனை காப்பி செய்திடுங்கள். இதற்கான வழிகள்: Copy பட்டன் அழுத்துவது / Ctrl + C கீகளைப் பயன்படுத்துவது / Edit மெனு சென்று அதில் Copy பிரிவில் கிளிக் செய்வது எனப் பல வழிகள் உள்ளன. இதில் உங்களுக்குப் பிரியமான வழியில் காப்பி செய்திடவும். இனி அடுத்த படியாக இந்த அகலத்தில் இருக்க வேண்டிய Column ஐத் தேர்ந்தெடுக்கவும். அடுத்தபடியாக Paste Special என்ற பிரிவிற்குச் செல்ல வேண்டும். இது எங்கு உள்ளது? Edit மெனு சென்றால் இந்த பிரிவினைப் பார்க்கலாம். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன் Paste Special விண்டோ உங்களுக்குக் கிடைக்கும். Column Width என்ற பிரிவினைக் கண்டறியவும். இதனைத் தேர்ந்தெடுத்து ஜஸ்ட் ஓகே கிளிக் செய்திடவும். மேஜிக் நடந்தது போல எந்த டேட்டா மற்றும் பார்மட்டிங் எதுவும் மாறாமல் அகலம் மட்டும் மாறி அந்த இணிடூதட்ண மாற்றப்படுவதனைக் காணலாம்.

இழுத்துச் சென்றால் புதிய ஒர்க்புக்: நல்ல கட்டமைப்பில் ஓர் ஒர்க்ஷீட்டினை அமைத்துவிட்டால் அதனையே அடிப்படையாக வைத்து மற்ற ஒர்க்ஷீட்டுகளையும் அமைக்க விரும்புவோம். அதற்காக அந்த ஒர்க்ஷீட்டை அப்படியே காப்பி செய்திடுவோம். சில நேரங்களில் வேறு பயன் பாட்டிற்காகவும் ஒர்க் புக்கினை காப்பி செய்திட வேண்டியதிருக்கும். இதற்காக நிறைய காப்பி அண்ட் பேஸ்ட் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இது சற்று களைப்பான சமாச்சாரமாகத் தெரிகிறதா? இதற்குப் பதிலாக இந்த ஒர்க்ஷீட்டிற்கான டேப்பினை இழுத்துச் சென்று விட்டு அந்த இடத்தில் புதிய ஒர்க்புக்கினை அமைப்பது எவ்வளவு எளிதானது. ஆம், எக்ஸெல் அந்த வசதியினைத் தருகிறது.

முதலில் எந்த ஒர்க்புக் கிலிருந்து காப்பி செய்திட வேண்டுமோ அந்த ஒர்க்புக்கி னைத் திறந்து கொள்ளுங்கள். முதலில் இதனை ரெஸ்டோர் செய்திட வேண்டும். அதாவது அப்படியே காப்பி செய்வதற்குத் தயார் படுத்த வேண்டும். இதற்கு முதலில் Ctrl + F5 அழுத்துங்கள். இனி எந்த ஒர்க்ஷீட்டினை காப்பி செய்திட வேண்டுமோ அதன் டேபை மவுஸின் கர்சரைப் பிடித்து இழுக்கவும். ஒர்க் புக்கைச் சுற்றி கிரே ஸ்பேஸ் இருக்கும் அல்லவா? அதில் எங்கேனும் விட்டுவிடவும். மவுஸின் முனையை விட்டவுடன் அந்த ஒர்க் ஷீட்டுடன் புதிய ஒர்க்புக் உண்டாக்கப்படும். பழைய ஒர்க்புக் அப்படியேதான் இருக்கும். இதனை வேறு பெயரில் சேவ் செய்து பயன்படுத்தலாம். இன்னும் சில ஒர்க்ஷீட்டுகளை இதில் இணைக்க வேண்டும் என விரும்பினாலும் இணைக்கலாம்.
ஒவ்வொரு வரிசையாகக் காப்பி செய்து பேஸ்ட் செய்வதைக் காட்டிலும் இது எவ்வளவு எளிதானது என்று பார்த்தீர்களா!

எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோசேவ்: எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்படும் பைல்களைத் தாமாக சேவ் செய்திடும் அரிய வசதி ஒன்று உள்ளது. பலர் இதனை செட் செய்து இதன் பயனை அனுபவிக்காமலேயே இருக்கின்றனர். குறிப்பிட்ட கால அவகாசத்தில் தானாகவே செயல்படும் பைல்கள் அதுவரை மேற்கொண்ட தகவல்களுடன் சேவ் செய்யப்படும். இதன் டிபால்ட்(Default) செட்டிங்ஸ் பத்து நிமிடங்களாகும். எனவே புரோகிராமிற்கு ஏதாவது ஏற்பட்டு கிராஷ் ஆனால் நீங்களாக சேவ் செய்யாதபோது உங்களுடைய ஒன்பது நிமிட வேலை வீணாகிவிடும். எனவே ஆட்டோ சேவ் எனச் சொல்லப்படும் இந்த செயல்பாட்டின் நேரத்தைச் சுருக்கமாக சிறிய கால அவகாசமாக செட் செய்திடலாம். மேலும் இந்த பைலுக்கான பேக்கப் பைலை உருவாக்கும் படியும் செட் செய்திடலாம்.

இதற்கு Tools மெனு கிளிக் செய்து அதில் வரும் மெனுவில் Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Save என்ற டேபில் கிளிக் செய்தால் வரும் சிறிய விண்டோவில் Save Auto recover in every என்று ஒரு வரியும் அதன் அருகே நிமிடங்களை செட் செய்திட எண்ணுடன் மேல் கீழ் அம்புக் குறிகளும் கிடைக் கும். இதில் 10 என்று இருப்பதை மாற்றுங்கள். எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை தகவல்களை சேவ் செய்திட எண்ணுகிறீர்களோ அந்த எண்ணை அமைக் கவும். பின் அதன் கீழாக Auto recover save location என்று ஒரு வரியின் எதிரே எங்கு இந்த பைல் சேவ் செய்யப் பட வேண்டும் என்பதனை காட்டும் கட்டம் இருக்கும். இங்கு நீங்கள் விரும்பும் இடத்தில் பைலை சேவ் செய்திடும் வகையில் மாற்றலாம். பின் ஓகே கொடுத்து வெளியேறவும்.

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஏன் இந்த அடையாளம்?

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் திடீரென ஒரு நெட்டு வரிசை முழுவதும் XXXX எனக் காணப்படும். இது எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த அடையாளம் வருகிறது. சிறிது எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம். நாம் தெளிவாக டேட்டாவினைத் தந்துள்ளோம். ஆனால் தேவையற்ற வகையில் சம்பந்தமில்லால் ஏன் இந்த அடையாளம் வருகிறது? எண்கள் இருக்க வேண்டிய செல்லில் ஏன் இந்த நான்கு குறியீடுகள் வருகின்றன? வேறு ஒன்றும் இல்லை. செல்லின் அகலத்தை மீறி நீங்கள் எண்களைத் தந்திருக்கிறீர்கள். அகலம் போதாததால் இந்த அடையாளம் காட்டப்படுகிறது. அடையாளம் நீங்கி எண்கள் வரவேண்டும் என்றால் என்ன செய்திட வேண்டும்? செல்லின் அகலத்தைச் சற்று அதிகப்படுத்த வேண்டும். அவ்வளவு தான். நீங்கள் எதிர்பார்க்கும் எண்கள் அங்கு இடம் பெறும்.

சில நேரங்களில் 2E+15 என்ற அடையாளம் இடம் பெற்றிருக்கும். இதன் பொருள் என்ன? ஒன்றுமில்லை; உங்கள் எண் சயின்டிபிக் நொட்டேஷனில் தரப்பட்டுள்ளது. இது எப்போது ஏன் ஏற்படுகிறது. அந்த செல்லின் பார்மட் ஜெனரலாக இருந்து நீங்கள் கொடுக்கும் எண் மிக நீளமானதாக இருந்தால் இந்த மாதிரி சயின்டிபிக் நொட்டேஷன் கொடுக்கும் வகையில் எக்செல் வடிவமை க்கப்பட்டுள்ளது. இங்கும் செல்லின் அகலத்தை நீட்டி விட்டால் பிரச்னை தோன் றாது. எப்படி செல்லின் அகலத்தை நீட்டுவது? மவுஸ் பாய்ண்ட்டரை இரண்டு செல்கள் பிரிக்கும் இடத்தில் கொண்டு செல்லுங்கள். அது இரண்டு சைட் அம்புக்குறியாக மாறும். உடனே இடது மவுஸ் பட்டனைக் கிளிக் செய்து அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள்.

இனி அப்படியே மவுஸை வலது பக்கம் சிறிது சிறிதாக இழுங்கள். தானாக செல் அகலம் அதிகரிக்கப்படும். இதற்குப் பதிலாக டயலாக் பாக்ஸ் திறந்தும் AutoFit கட்டளை கொடுக்கலாம்.முதலில் Format மெனு செல்லுங்கள். அதில் Column துணை மெனு தேர்ந்தெடுங்கள். இதில் Width பிரிவில் Autofit Selection என ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறினால் நெட்டு வரிசை டேட்டாவிற்கேற்றபடி தானாக பெரிதாகி அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்.

வேர்டில் எளிதான ரிபீட் படங்கள்


வேர்டில் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு முறை பிரேக் கொடுத்து நீங்கள் தொடர்ந்து அடித்த டெக்ஸ்ட் அனைத்தையும் மீண்டும் அமைக்க வேண்டியுள்ளது. என்ன செய்வீர்கள்? வேர்டுக்குப் புதிது என்றால் மீண்டும் அனைத்தையும் டைப் செய்வீர்கள்.

சிறிது பழக்கப்பட்டவர் என்றால் தேவைப்பட்ட டெக்ஸ்ட்டை செலக்ட் செய்து பின் காப்பி செய்து அதன்பின் குறிப்பிட்ட இடத்தில் பேஸ்ட் செய்வீர்கள். அதற்குப் பதிலாக நீங்கள் இறுதியாக டைப் செய்த டெக்ஸ்ட் தொடரை அப்படியே பேஸ்ட் செய்திட ஷார்ட் கட் கீ தொகுப்பு இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

இருக்கிறது. ஜஸ்ட், Ctrl + Y அழுத்துங்கள். எந்த இடத்தில் டெக்ஸ்ட்டை இடைச் செருகல் செய்திட வேண்டுமோ அந்த இடத்தில் வைத்து இந்த இரு கீகளையும் அழுத்தினால் உடனே அந்த டெக்ஸ்ட் பேஸ்ட் ஆகும்.

ஒரிஜினல் அதே இடத்தில் அப்படியே: எம்.எஸ். வேர்ட், எக்ஸெல் அல்லது பவர்பாய்ண்ட் பைல்களைக் கையாள்கையில் சில வேளைகளில் பைல் ஒன்றில் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். உங்கள் நோக்கம் பழைய பைலை அப்படியே வைத்துக் கொண்டு மாற்றங்களுடனான புதிய பைல் வடிவத்தினை புதிய பெயரில் வைத்திட வேண்டும் என்பது. ஆனால் ஏதோ எண்ணத்தில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கையில் சேவ் அஸ் செல்லாமல் கண்ட்ரோல் + எஸ் கீகளை அழுத்தி ஒரிஜினல் பைலை மாற்றங்களுடன் சேவ் செய்து ஒரிஜினல் பைலை கோட்டை விட்டுவிடுவீர்கள்.

இதற்கு தவறே ஏற்படுத்த முடியாத ஒரு வழி ஒன்று உள்ளது. File மெனு திறந்து Open பிரிவு செல்லுங்கள். இந்த விண்டோவில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பைலைத் தேடுங்கள். பைலைக் கண்டுபிடித்தவுடன் Open பட்டனை அழுத்தும் முன் சற்று தாமதப்படுத்துங்கள். எப்போதாவது அந்த பட்டனில் கீழ் நோக்கி ஒரு அம்புக் குறி இருப்பதனைப் பார்த்திருக்கிறீர்களா? நிச்சயம் பார்த்திருக்க மாட்டீர்கள்.

இப்போது பாருங்கள். இது போன்ற அம்புக் குறி இருப்பது எதனைக் குறிக்கிறது? சம்பந்தப்பட்ட பட்டனுக்கு இன்னும் சில சாய்ஸ் இருப்பதனைக் காட்டுகிறது. இப்போது அந்த அம்புக் குறியினை கிளிக் செய்திடுங்கள். ஒரு சிறிய மெனு விரியும். அதில் “Open as Copy” என்ற பிரிவைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் புரோகிராம் நீங்கள் தேர்ந்தெடுத்த பைலின் காப்பி ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். இந்த பைலில் நீங்கள் மேற்கொள்ள விரும்பும் எடிட் வேலைகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் ஒரிஜினல் பைல் அப்படியே இந்த மாற்றங்கள் இன்றி இருக்கும்.

எக்ஸெல் டேட்டாவில் மதிப்பை கூட்ட!



எக்ஸெல் தொகுப்பில் சில ஒர்க் ஷீட்களில் பொதுவான ஒரு மதிப்பை வைத்துக் கொண்டு அவற்றை மற்ற செல்களில் பயன்படுத்தும் வகையில் அமைத்திருப்போம். வெவ்வேறு செல்களில் அந்த மதிப்பினை அவற்றில் உள்ள பிற மதிப்புடன் கூட்டவோ, பெருக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டியதிருக்கும். அப்போது ஒவ்வொரு செல்லாக இந்த மதிப்பினைக் கொண்ட டேட்டாவை அமைத்து இயக்க அதிக நேரம் பிடிக்கும். இதற்கு ஒரு சுருக்க குறுக்கு வழியினை எக்ஸெல் தருகிறது.

அதன்பின் இந்த மதிப்பினை எந்த செல்களில் எல்லாம் பயன்படுத்த வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அதனை கண்ட்ரோல் அழுத்தியவாறே தேர்ந்தெடுக்கவும். பின் Edit மெனுவில் Paste Special பங்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அந்த டயலாக் பாக்ஸில் Operation என்று ஒருபிரிவு இருக்கும். இதில் இந்த வேல்யூவை கூட்டவேண்டுமா அல்லது வேறு வகைகளில் செயல்படுத்த வேண்டுமா எனக் கேட்டு அனைத்து ஆப்ஷன்களும் தரப்பட்டிருக்கும்.

இதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் திட்டமிட்டபடி தேர்ந்தெடுத்த செல்களில் மாற்றங்களைக் காணலாம். இதில் இன்னொரு மாற்றத்தையும் நீங்கள் எதிர்பாராத வகையில் மேற்கொள்ளப் படுவதனைக் காணலாம். இந்த செல்களில் ஏற்கனவே சில பார்மட்டிங் வழிகளை மேற்கொண்டிருந்தால் அவை மறைந்திருக்கும். கவலைப்பட வேண்டாம். அப்படிப்பட்ட செல்களில் மாற்றங்களை மேற்கொள்வதாக இருந்தால் Paste Special டயலாக் பாக்ஸில்முதல் பகுதியில் Values என்று ஒரு பிரிவு இருக்கும். அதனை முதலில் தேர்ந்தெடுத்துவிட்டு பின் கணக்கிடுவதற்கான தேர்வுகளைத் தேர்ந்தெடுத்து பின் ஓகே கிளிக் செய்திடவும்.

ரன் கமாண்டில் புரோகிராம்கள்



நாம் பயன்படுத்தும் அனைத்து புரோகிராம்களுக்கும் மானிட்டர் திரையில் ஷார்ட் கட் ஐகான்களை ஏற்படுத்த முடியாது. பின் ஏதேனும் ஒன்றைத் தேடுவது சிரமமாகிவிடும். புரோகிராம்கள் வேண்டும் என்றால் ஸ்டார் பட்டன் அழுத்தி பின் புரோகிராம் கிளிக் செய்து பின் வரும் நீண்ட மெனுவில் தேடும் புரோகிராம் உள்ள போல்டரைத் திறந்து குறிப்பிட்ட புரோகிராம் பெயரில் கிளிக் செய்வதும் சிரமமே. எடுத்துக் காட்டாக உங்களுக்கு கால்குலேட்டர் தேவையாய் உள்ளது. ஸ்டார்ட் –– புரோகிராம் –– அக்சசரீஸ் – கால்குலேட்டர் என வரிசையாகச் செல்வது எரிச்சல் படுத்தும் வேலைதான்.

இதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது. நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான புரோகிராம்களை ரன் கமாண்ட் மூலம் பெறலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து ரன் விண்டோவில் கட்டளையை டைப் செய்வதன் மூலம் பெரும்பான்மையான புரோகிராம்களைப் பெறலாம். அவற்றில் சில இங்கு தரப்பட்டுள்ளது.

calc — கால்குலேட்டர், charmap – கேரக்டர் மேப்
clipbrd – விண்டோஸ் கிளிப் போர்ட்
control– கண்ட்ரோல் பேனல்
acrobat அடோப் அக்ரோபட் ரீடர்
photoshop அடோப் போட்டோ ஷாப்
firefox பயர்பாக்ஸ் பிரவுசர்
fonts – பாண்ட்ஸ் போல்டர்
freecell பிரீசெல் கார்ட் கேம்
iexplore இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
control keyboard கீ போர்டு புராபர்ட்டீஸ்
excel – எம்.எஸ். எக்ஸெல்
mspaint / pbrush – பெயிண்ட் புரோகிராம்
powerpnt பவர்பாயிண்ட் புரோகிராம்
winword – எம்.எஸ். வேர்ட் தொகுப்பு
notepad – நோட்பேட்
osk – ஆன்ஸ்கிரீன் கீபோர்ட்
realplay – ரியல்பிளேயர்
regedit32 / regedit – ரெஜிஸ்ட்ரி எடிட்டர்
shutdown– ஷட் டவுண் விண்டோஸ்
msinfo32–msinfo32– சிஸ்டம் இன்பர்மேஷன்

இது போல பல கட்டளைகளை ரன் விண்டோவில் கொடுத்து புரோகிராம்களை இயக்கலாம். ஆனால் இந்த புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பிரிண்டர்களை எப்படி பராமரிப்பது?


பிரிண்டர்களைச் சரியாகப் பராமரிக்கா விட்டால் அவை அச்சடிக்கின்ற வகையில் பிரச்னை ஏற்படும். சில வேளைகளில் பிரிண்டர்கள் இயங்காமல் போகின்ற சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. எந்த வழிகளில் இவற்றை அடிக்கடி கவனிக்க வேண்டும் என்பனை இங்கு பார்க்கலாம்.

முதலாவதாக இங்க் கார்ட்ரிட்ஜ்களை சுத்தமாகவும் புதியதாகவும் வைத்திருக்க வேண்டும். நீங்கள் அடிக்கடி பிரிண்டரைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அதில் உள்ள கார்ட்ரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும் மை உலர்ந்து போகும். உலர்ந்து போனால் அதனை பின் எந்த நிலையிலும் பயன்படுத்த முடியாது.

பின் புதிய கார்ட்ரிட்ஜ் தான் வாங்க வேண்டும். மை உலர்ந்து போன கார்ட்ரிட்ஜ் வாங்கிய பணம் வீண் தான்.எனவே இரு நாட்களுக்கு ஒரு முறை கருப்பு/வெள்ளை மற்றும் வண்ணங்கள் கலந்த அச்சில் அரை பக்கமாவது அச்செடுக்க வேண்டும்.

பல வேளைகளில் நாம் பிரிண்டரை மூடாமல் வைத்திருப்போம். அப்போது பிரிண்டரில் மேலாக மட்டுமின்றி உள்ளேயும் குறிப்பாக அச்சிடும் ஹெட் பகுதியில் தூசி படியும். இதனை அவ்வப்போது சரியான துணி கொண்டு சுத்தம் செய்து தூசி தொடர்ந்து படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதில் மிக கவனமாக செயல்பட வேண்டும். பிரிண்ட் ஹெட்டில் மிக மிக நுண்ணிய துளைகள் இருக்கும். இந்த துளைகள் வழியாகத்தான் கார்ட்ரிட்ஜ் மை அச்சிடும் டாகுமெண்ட்டிற்கேற்ப வெளிவந்து நமக்கு அச்சிட்ட படிவத்தைக் கொடுக்கிறது.

இந்த துளைகள் சில வேளைகளில் அதன் மீது உலர்ந்த மையினாலும் அடை படலாம். இதனை எவ்வாறு சுத்தம் செய்வது என நீங்கள் பிரிண்டர் வாங்கும்போது கொடுக்கப்பட்ட உதவிக் குறிப்பில் இருக்கும். அதனைப் பின்பற்றியே நீங்கள் ஹெட்டைச் சுத்தம் செய்திட வேண்டும். இங்க் கார்ட்ரிட்ஜிலேயே ஹெட் இருந்தால் பிரச்னை இல்லை; எடுத்து சுத்தம் செய்வது எளிதாகிவிடும். இல்லையேல் பிரிண்ட் ஹெட் இருக்கும் பகுதியில் அதற்கு செல்லும் வயர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இன்றி சுத்தம் செய்திட வேண்டும்.

பொதுவாக சுத்தமான (டிஸ்டில்டு) தண்ணீர் மற்றும் ஆல்கஹால் கொண்டு துணியை நனைத்து சுத்தம் செய்யலாம். தூசியை முதலில் சாதாரணமாகச் சுத்தம் செய்துவிட்டு பின் இந்த முறையைக் கையாள வேண்டும். மை உறைந்து ஹெட்டில் இருந்தால் இந்த முறையில் சரியாகிவிடும். உறைந்த மையைச் சரி செய்திட இன்னொரு வழியும் உண்டு. தொடர்ந்து பல பிரிண்ட்கள் எடுத்தால் உலர்ந்த மை பயன்படுத்தப்பட்டு ஹெட்டில் உள்ள துளைகளில் உள்ள அடைப்புகள் நீக்கப்படலாம்.

ஆனால் எத்தனை பிரிண்ட் இவ்வாறு எடுக்கப்பட வேண்டும் என்பது உலர்ந்த தன்மையைப் பொறுத்தது. சில வேளைகளில் 10 முதல் 15 முறை பிரிண்ட் எடுக்க வேண்டும். இது வீண்தான். ஆனால் வேறு வழியில்லை. மொத்தமாகக் கீழே வீணாய்ப் போட்டு பணம் போவதைக் காட்டிலும் சில பிரிண்ட்கள் வீணாக எடுப்பதில் தவறில்லை. பிரிண்ட் ஹெட்களை மட்டும் தனியே கழற்றி எடுக்கும் வகையில் பிரிண்டர் வடிவமைக்கப் பட்டிருந்தால் அதனைத் தனியே பிரித்து ஆல்கஹால் அல்லது நீர்த்த அம்மோனியா திரவத்தில் சில நிமிடங்கள் ஊற வைத்து சுத்தம் செய்யலாம். இதனை விஷயம் தெரிந்த ஒருவரைக் கொண்டு மேற்கொள்வதே நல்லது.

எக்ஸ்புளோரர்-7 கூடுதல் வசதிகள்


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு போட்டியாக பயர்பாக்ஸ் மக்களிடையே பிரபலமானாலும் இன்னும் பெரும்பான்மை யானவர்கள் எக்ஸ்புளோரர் தொகுப்பையே பின்பற்றி வருகின்றனர். இதற்கான கூடுதல் வசதிகள் தரும் புரோகிராம் ஒன்று குறித்து இங்கே தகவல் தரப்படுகின்றன. இந்த புரோகிராம் IE 7 Pro என அழைக்கப்படுகிறது. இவை தரும் வசதிகளைப் பார்க்கையில் நிச்சயமாய் நாம் இதனைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

இந்த புரோகிராம் கீழ்க்காணும் வசதிகளை உங்களுக்குக் கூடுதலாய்த் தருகிறது. இன்டர்நெட்டில் உள்ள படிவங்களை சேவ் செய்தல், பைல்களை டவுண்லோட் செய்கையில் அச்செயலை நிர்வகித்தல், மவுஸ் மூலம் பிரவுசர் கண்ட்ரோல் செய்தல், ஸ்பெல்லிங் சரியா எனச் சோதித்தல், மேம்படுத்தப்பட்ட டேப் பயன்பாடு, ட்ராக் அண்ட் ட்ராப் புதுமை வசதி, உள்ளுக்குள்ளாக தேடுதல், வேகமான வெப் பிரவுசிங், கிராஷ் ஆனால் மீண்டெழுதல், விளம்பர தடை, பிளாஷ் தடை, இறுதியாக மூடிய தளத்தைத் திறத்தல், அட்ரஸ் பாரிலிருந்தே புதிய டேப் திறத்தல், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மெனு பாரினை அட்ரஸ் பாருக்கு மேலே கொண்டு செல்லல் –– இப்படி பல வசதிகள் கிடைக்கின்றன. சொல்லிக் கொண்டே போனால் பல கூடுதல் விஷயங்களைச் சொல்ல வேண்டும். இதனை ஒரு முறை பயன்படுத்திப் பார்த்தால் பின் இந்த புரோகிராம் இன்றி இன்டர்நெட் எக்ஸ்புளோரரைப் பயன்படுத்த தயங்குவோம். http://www.download.com/IE7Pro/300012777_410649334.html?tag=pop.software&cdlPid=10844454 என்ற முகவரியில் உள்ள தளத்தில் இந்த புரோகிராமிற்கான பைல் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்வதும் இன்ஸ்டால் செய்வதும் எளிது.

மேலே குறிப்பிட்ட வசதிகளில் சிலவற்றை இங்கு விளக்கமாக சொல்லியாக வேண்டும். மவுஸ் ஜெஸ்ச்சர் (Mouse gesture) என்பது மவுஸால் திரையில் ஒரு சில எளிய அடையாளங்களை எழுதி அமைப்பது. இந்த அடையாளங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை பல செயல்களை மேற்கொள்ளச் செய்கின்றன. டேப் ஒன்றைத் திறந்து மூடச் செய்கின்றன. முன்னால் மற்றும் பின்னால் உள்ள தளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. அச்சிடுவதற்கான கட்டளை தருகிறது. இணையப் பக்கத்தை ஸ்குரோல் செய்து செல்ல உதவுகிறது. கிராஷ் ஏதேனும் ஏற்பட்டால் அடுத்த சரியான நிலைக்குக் கம்ப் யூட்டர் திறக்கப் படுகையில் முன்பு இருந்த அனைத்து தளங்களும் திறக்கப்படுகின்றன.

இணைய தளம் ஒன்றை அப்படியே படமாக சேவ் செய்திடலாம். பி.எம்.பி., ஜேபெக், ஜிப், பி.என்.ஜி. என பல பார்மட்டுகளில் இவற்றை சேவ் செய்திடலாம். இவற்றிற்கு மேலாக யு–ட்யூப் வீடியோவினை காப்பி செய்திடும் வசதியை ஐ.இ. 7 புரோ செய்கிறது. இன்ஸ்டால் செய்த பின் Scripts&Plugins module “User Scripts” என்ற பிரிவில் “Download Video from Youtube” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இவ்வாறு ஏற்படுத்தியபின் பார்த்தால் யு–ட்யூப் தளத்தின் ஒவ்வொரு வீடியோ அருகிலும் “save as...” என்ற பிரிவு கிடைக்கும்.

இதில் கிளிக் செய்து வீடியோவினை டவுண்லோட் செய்து கொள்ளலாம். வீடியோ பைல் flv பைல் ஆக டவுண்லோட் செய்யப்படும். நீங்கள் இந்த பார்மட் பைலை இயக்கும் வீடியோ பிளேயரை இன்ஸ்டால் செய்து வீடியோவினைப் பார்க்கலாம். அல்லது வேறு பார்மட்டிற்கு மாற்றக் கூடிய புரோகிராமினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும்.இது போன்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வசதிகள் பல உள்ளன. இந்த புரோகிராமினை இறக்கி இயக்கிப் பார்க்கவும்.

நினைவூட்டும் இணைய தளம்


பரபரப்பான வாழ்க்கையில் சில முக்கிய நிகழ்ச்சிகளை நாம் மறந்து போகிறோம். அன்பானவர்களின் பிறந்த நாள், உற்ற தோழியின் திருமணம், வாங்கிய கடனுக்கு வங்கியில் பணம் செலுத்தும் நாள், கொடுத்த கடனுக்கு வட்டி வசூலிக்கும் நாள், வீட்டிற்கான வரிகள் செலுத்தும் நாள் என எத்தனையோ நாட்களை மறந்துவிட்டு பின் வருத்தப்படுகிறோம்.

உடன் இருப்பவர்களும் நமக்கு அதனை நினைவு படுத்த மறந்துவிடுகின்றனர். ஆனால் நாம் அன்றாடம் உறவாடும் கம்ப்யூட்டரும் இணையமும் இந்த பணியை நமக்குச் சரியாக மேற்கொண்டு நம்மை பல இக்கட்டுகளிலிருந்து பாதுகாக்கின்றன. இணையத்தில் உள்ள ஒரு தளம் நினைவுபடுத்தும் செயல்பாட்டினை மேற்கொள்கிறது.

இதன் பணிகளைப் பார்த்தால் நிச்சயம் இதனைப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் முடிவு செய்வீர்கள். இந்த சேவை இலவசமாகக் கிடைக்கிறது என்பது இன்னும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். http://www.remime.com/ என்பதே அந்த தளத்தின் முகவரி. இதில் லாக் ஆன் செய்து Sign Me Up என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் உங்கள் இமெயில் முகவரியை டைப் செய்து பாஸ்வேர்ட் ஒன்று உருவாக்கவும். முக்கியமாக எந்த நேர வளாகத்தில் (time zone) நீங்கள் உள்ளீர்கள் என்பதனைக் குறிப்பிடுவது முக்கியம்.

அங்கு தரப்பட்டிருக்கும் எழுத்துக்கள் அடங்கிய சொல்லை டைப் செய்து Create My Account என்ற இடத்தில் என்டர் தட்டவும். பின் ஓரிரு நிமிடங்களில் நீங்கள் கொடுத்த இமெயில் அக்கவுண்ட்டிற்கு தகவல் அனுப்பப்பட்டு உங்கள் பதிவு ஏற்றுக் கொள்ளப்படும். இனி மீண்டும் அந்த தளத்திற்குச் சென்று உள்ளே செல்லவும். உள்ளே நுழைந்தவுடன் அங்கு மூன்று டேப்கள் இருப்பதனைக் காணலாம். முதலாவதாக Home என்ற பிரிவு. இதில் பிறந்தநாள்கள், முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பதிந்து கொள்ள வசதி தரப்பட்டிருக்கும்.

இவற்றின் கீழேயே அடுத்து வர இருக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல் மற்றும் உங்கள் அக்கவுண்ட்டிற்கான லிங்க்குகளைக் காணலாம். தானாகவே நீங்கள் அடுத்து வர இருக்கும் நிகழ்ச்சிகள் (Upcoming Events) பட்டியலில் இருப்பீர்கள். My Account என்ற பகுதியில் கிளிக் செய்தால் நீங்கள் ஏற்கனவே கொடுத்த தகவல்களை எடிட் செய்து மாற்றலாம். Birthdays என்ற பிரிவு மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதனைக் காணலாம்.

View All Birthdays, Add New Birthday, Import and Get Friend’s Birthday இதில் எனத் தரப்பட்டிருக்கும். Get Friend’s Birthday என்ற பிரிவின் மூலம் உங்கள் நண்பருக்கு இமெயில் மூலம் செய்தி அனுப்பி அவரின் பிறந்த நாளைக் காணலாம். Events என்ற பிரிவில் முக்கிய நிகழ்ச்சிகளைப் பதிந்து வைத்து அறிந்து கொள்ளலாம். புதிய நிகழ்ச்சிகளையும் சேர்க்கலாம். புதிய நிகழ்ச்சிகளைச் சேர்க்கையில் அது குறித்து ஒரு நினைவூட்டல் வேண்டுமா அல்லது அடுத்தடுத்து வேண்டுமா என்று குறிப்பிடலாம். இவ்வாறு தர வேண்டிய தகவல்களைத் தந்துவிட்டால் இந்த தளம் தானாக உங்களுக்கு அவ்வப்போது நீங்கள் செட் செய்ததற்கு ஏற்ப நினைவூட்டும் செய்திகளை அனுப்பிக் கொண்டே இருக்கும்.

எக்ஸ்புளோரர் டேப் ஷார்ட்கட்ஸ்



இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7ன் டேப் வழி பிரவுசிங் இந்த தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்ட போது மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது. பலர் இத்தொகுப்பிற்கான புதிய ஷார்ட் கட் கீகளின் தொகுப்பு குறித்து அறிந்து கொள்ள முயற்சித்தனர்.

பலருக்கு இந்த தொகுப்பு எளிதான ஒன்றாக மாறிவிட்டிருந்தாலும் சிலருக்கு இன்னும் பல விஷயங்கள் புரியாததாகவே உள்ளன. ஒரு வாசகர் டேப் பிரவுசிங் மட்டும் குறித்த சில ஷார்ட் கட் கீகளைக் கூறுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

அவற்றைக் கூறும் முன் ஒரு சிறிய என் எண்ணம். எந்த புதிய தொகுப்பு வந்தாலும் அதனை நம் பழக்கத்திற்கும் புழக்கத்திற்கும் கொண்டு வருவதற்கு சில நாட்களாகும். இது நாம் அந்த தொகுப்பின் மீது கொண்டுள்ள பார்வையைப் பொறுத்தது. இது நமக்கு வராது என்று எண்ணிக் கொண்டே புதிய சாப்ட்வேர் புரோகிராம்களைக் கையாண்டால் அது நமக்கு எட்டாக் கனியாகவே இருக்கும். புது வசதிகள் எளிதாக நமக்குக் கிடைக்கும் எனப் பயன்படுத்தத் தொடங்கினால் நிச்சயம் புரோகிராம் நம் வசத்திற்கு வரும்.

இனி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7க் கான டேப் பயன்பாடு குறித்த ஷார்ட் கட் கீகளை இங்கு காண்போம். இந்த பதிப்பின் அதிக பயன் தரும் புதிய வசதி இந்த டேப் பிரவுசிங் ஆகும். எனவே இங்கே தரப்படும் ஷார்ட் கட் கீகள் அனைவருக்கும் அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

Ctrl + T: முன்பகுதியில் புதிய டேப் ஒன்றைத் திறக்கும்
Ctrl + Click: இணைய தளப் பக்கத்தில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்தால் பின்னணியில் புதிய டேப்பில் இந்த லிங்கிற்கான தளம் திறக்கப்படும்.
Ctrl + Shift + Click: இணைய தளப் பக்கத்தில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்தால் முன்னணியில் புதிய டேப்பில் இந்த லிங்கிற்கான தளம் திறக்கப்படும்.
Alt + Enter: அட்ரஸ் பாரிலிருந்து ஒரு புதிய டேப் திறக்க. இந்த கீகளே சர்ச் பாக்ஸிலிருந்தும் ஒரு புதிய டேப் ஒன்றைத் திறக்கும்.
Ctrl + Q : தம்ப் நெயில் என அழைக்கப்படும் காட்சித் தோற்றங்களில் வேகமாக டேப்களைத் திறக்க
Ctrl + Tab: அல்லது Ctrl + Shift + Tab: டேப்களுக்கு இடையே வேகமாகப் புகுந்து செல்ல
Ctrl + N : இந்த கீ தொகுப்பில் N என்ற இடத்தில் 1 முதல் 8 வரையிலான எண்ணைத் தந்தால் அந்த எண்ணில் உள்ள டேப்பிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
Ctrl + 9 : இறுதியாக உள்ள டேப்பிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்
Ctrl + W : தற்போது உள்ள டேப்பில் உள்ள இணைய தளம் மூடப்படும்.
Ctrl + Alt +F4: மற்ற அனைத்து டேப்களும் மூடப்படும்.
Alt +F4: அனைத்து டேப்களும் மூடப்படும்.

இன்னும் சில மவுஸ் ஒன்றைப் பார்ப்போமா!
உங்களுடைய மவுஸில் நடுவில் ஒரு பட்டன் அல்லது ஸ்குரோல் வீல் இருக்கும் பட்சத்தில் வெப்சைட்டில் ஏதேனும் ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால் அந்த தொடர்புக்கான தளம் பின்னணியில் புதிய டேப்பில் திறக்கப்படும்.

பைல் டீடெய்ல்ஸ் செட் செய்யலாமா?



உங்களுடைய பைல் அல்லது போல்டர் குறித்த தகவல்களை நீங்கள் எப்போதாவது தேடியதுண்டா? அது எப்போது தயாரிக்கப்பட்டது? எப்போது மீண்டும் எடிட் செய்யப்பட்டது? யார் அதனைத் தயாரித்தது? பைல் எந்த வகையைச் சார்ந்தது? போன்ற இன்னும் பல விவரங்கள் குறித்து அறிய வேண்டும் என ஆசை உண்டா? உண்டு என்றால் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

போல்டரில் உள்ள பைல்களை Details வகையில் பார்க்கும் போது பைலின் பெயர், அளவு, வகை மற்றும் இறுதியாக எடிட் செய்யப்பட்ட தேதி ஆகியவை காட்டப்படுகின்றன. இதற்கு மேலும் விபரங்கள் தேவை என்றால் காட்டப்படும் விதத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதற்கு Start அழுத்தி கிடைக்கும் கட்டங்களில் My Documents என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு நீங்கள் தகவல்கள் தேவைப்படும் பைல் அல்லது போல்டரை சிங்கிள் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்தபின் மெனு பார் சென்று View மெனுவில் கிளிக் செய்திடவும்.

பின் ஸ்குரோல் வீலைச் சுழற்றி கீழாக Choose Details என்று இருக்கும் இடத்தில் மீண்டும் கிளிக் செய்திடவும். இப்போது Choose Details டயலாக் பாக்ஸ் உங்களுக்குக் கிடைக்கும். இதில் பல்வேறு (44) வகை தகவல்களுக்கான லேபிள்கள் அடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு எவை எல்லாம் வேண்டுமோ அதற்கான கட்டங்களில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தலாம். தேவையற்றதற்கான லேபிள்களின் டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல்கள் எந்த வரிசையில் காட்டப்பட வேண்டும் என்பதனை நீங்கள் நிர்ணயம் செய்துவிடலாம். இதற்கு Move Up அல்லது Move Down பட்டனை அழுத்தி அமைக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை காட்ட வேண்டுமா அல்லது மறைக்க வேண்டுமா என்பதனையும் முடிவு செய்திடலாம். இதற்கு Show அல்லது Hide பட்டனை அழுத்த வேண்டும். எல்லாம் செட் செய்த பின் ஓகே கிளிக் செய்திடுங்கள்.

இமெயிலை ட்யூன் செய்யலாமா?




இமெயில் பயன்படுத்தும் அனைவரும் இவற்றை தக்க வைத்துக் கொள்ளலாம்.

1. சப்ஜெக்ட் லைன்: மின்னஞ்சல் கடிதங்களில் பலரால் அலட்சியப்படுத்தப்படுவதும் ஆனால் முக்கியமானதுமான ஒரு விஷயம் சப்ஜெக்ட் லைன் தான். மின்னஞ்சலில் எழுதப்படும் விஷயம் குறித்த அடிப்படைத் தகவலைத் தருவதற்காகத்தான் இது உள்ளது.

சும்மா ஏடி! ஏஞுதூ! என்று அமைப்பதெல்லாம் தவறு. இமெயில் ஏற்கனவே வந்ததைச் சார்ந்தது என்றால் முன்பு வந்த இமெயிலின் சப்ஜெக்ட்டையும் குறித்து சப்ஜெக்ட் லைன் அமைக்க வேண்டும்.

2. சிக்னேச்சர்: கடிதங்களின் முடிவில் உங்களுடைய பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரியை கொண்ட சிக்னேச்சர் அமைப்பது நல்லது. அமைத்துவிட்டு சிக்னேச்சரை சேர்த்து அனுப்ப கட்டளை கொடுத்தால் உங்களைப் பற்றிய விபரம் மெயிலைப் படிப்பவருக்குக் கிடைக்கும். அவர் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால் இது உதவும்.

3. தெளிவில்லாத தகவல்: இமெயில் கடிதங்களில் எழுத விரும்பும் தகவல்களைச் சுருக்கமாகவும் முக்கியமான விபரங்களை உள்ளடக்கியதாகவும் அமைக்க வேண்டும். தேவையற்ற தகவல்கள் மற்றும் விலாவாரியான விபரங்கள் தருவதனைத் தடுக்க வேண்டும். இமெயில் என்பது இலவசம் என்பதால் பல மெயில்கள் ஒருவருக்கு வரலாம். அப்படி இருக்கையில் தகவல்களைத் தெளிவாக எழுத வேண்டும். அப்போதுதான் மெயிலைப் பெறுபவர் தன் கருத்தை பதிலாக எழுதி அனுப்ப விரும்புவார்.

4. சுற்றி வளைக்காதே: மெயில்களில் தகவல்களைச் சுருக்கமாகவும் அனைத்து தகவல்களையும் தருவதாக இருக்க வேண்டும். சிறிய வாக்கியங்களையும் பாராக்களையும் அமைக்க வேண்டும். பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு நண்பருக்கு எழுதுவதாக இருந்தாலும் சுவையாகவும் சுருக்கமாகவும் எழுதுவதே நல்லது. நீங்கள் எழுதும் கடிதம் உங்கள் நண்பரை இவனை ஏண்டா சந்தித்தோம் என்று எண்ண வைக்கக் கூடாது அல்லவா!

5. கத்தாதே! –– ஆம், இமெயில்களில் கேப்பிடல் லெட்டர்களில் எழுதுவது பொது இடத்தில் அதிக சத்தத்துடன் பேசுவதற்கு ஒப்பாகும். எனவே கேப்பிடல் லெட்டர்ஸைப் பயன்படுத்துவது அறவே கூடாது.

6. எத்தனை அட்டாச்மென்ட்?: உங்கள் கடிதத்துடன் சில பைல்களை அட்டாச் செய்து அனுப்ப எண்ணினால் முதலில் அது அத்தியாவசியத் தேவைதானா? என்று முடிவு செய்து கொள்ளவும். மிகப் பெரிய அளவிலான பைலாக இருந்தால் பெறுபவர் அதனை இறக்கிப் பதிந்து கொள்ள நிறைய நேரம் எடுக்கும். எனவே சிறியதான பைலில் தகவல்களை இட்டு அனுப்பவும்.

7. தவறான இமெயில் முகவரி: சில வேளைகளில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் இமெயில் முகவரிக்குப் பதிலாக இன்னொருவரின் முகவரிக்கு அனுப்பி வைப்போம். எனவே எழுதி முடித்த இமெயிலுக்கான Send பட்டனை அழுத்துமுன் இமெயில் முகவரி சரியானதுதானா? என்று உறுதி செய்து கொள்ளவும்.

8. இமெயில் முகவரிகள் எத்தனை: பொதுவாக நமக்கு அலுவலகத்தில் தந்திருக்கும் இமெயில் முகவரியினை பெர்சனல் கடிதங்களை அனுப்பப் பயன்படுத்தக் கூடாது. பெர்சனல் கடிதங்களுக்கு என தனியே இமெயில் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு அதன் வழியாகவே நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இமெயில்களை அனுப்ப வேண்டும்.

9. தேவைக்கு அதிகமாய் இமெயில்: மிக விரைவாக தகவல்களை அனுப்ப மட்டுமே இமெயில்களைப் பயன்படுத்த வேண்டும். மற்றவற்றை போனில் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தலாம். இமெயில் என்பது பயன்படுத்த எளிதானதும் வசதியானதும் ஆகும். ஆனால் அதனைத் தேவைப்படும் முக்கிய காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

வைரஸ் புரோகிராம்கள் சரியாகச் செயல்படுகின்றனவா?


கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு பயம் வைரஸ் தான். பல்வேறு வழிகளில், வகை வகையான அழிக்கும் சக்திகளுடன் வரும் வைரஸ்கள் நம் செயல்பாட்டை முடக்கி வைப்பதுடன் நம்மைச் சார்ந்தவர்களின் கம்ப்யூட்டர்களையும் நாசம் செய்திடும் வகையில் பரவுகிறது. கம்ப்யூட்டர்களின் உள்ளே இருக்கும் புரோகிராம் களையும் கெடுக்கிறது.

இத்தகைய வைரஸ்களிடமிருந்து நம் கம்ப்யூட்டர்களைக் காத்திடவும் நமக்கு நிம்மதியான ஒரு வேலைப் பாதுகாப்பினைத் தரவும் அமைந்தவை தான் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் என அழைக்கப்படும் வைரஸ்களுக்கு எதிரான புரோகிராம்கள்.

பெரும்பான்மையான கம்ப்யூட்டர்கள் இன்று இவை இல்லாமல் இயங்குவதில்லை. அப்படி அமைக்கப்பட்டு இயக்கப்பட்டாலும் குறிப்பிட்ட சில வைரஸ்களை சில ஆண்டி வைரஸ் புரோகிராம்களால் ஒன்றும் செய்திட இயலவில்லை. வைரஸ் புரோகிராம்களின் கட்டமைப்பு அவ்வாறு அமைக்கப்படுகிறது. இருப்பினும் வாடிக்கை யாளர்கள் தரும் அனுபவக் கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் மேம்படுத் தப்பட்டு அதுவரை கண்டுபிடித்து அழிக்க முடியாத வைரஸ்களும் அழிக்கப்படுகின்றன.

ஒரு முறை நண்பர் ஒருவர் மிக நல்ல ஆண்டி வைரஸ் புரோகிராமினை வைத்து கம்ப்யூட்டரை இயக்குவதாகக் கூறிவிட்டு அந்நிலையிலும் எஸ்.வி.சி. ஹோஸ்ட் என்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைலைக் குறி வைத்துக் கெடுக்கும் வைரஸ் ஒன்று வந்திறங்கி பைல்களையும் போல்டர்களையும் எக்ஸிகூட்டபிள் பைலாக மாற்றிவிடுவதாக எழுதி இருந்தார். இதற்கு இன்னொரு நண்பர் பதில் கூறுகையில் அவர் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் புரோகிராமிற்கு அந்த வைரஸ் அகப்படாது என்று கூறிவிட்டு பதிலாக இன்னொரு இலவச ஆண்டி வைரஸ் புரோகிராமினைப் பயன்படுத்துமாறு கூறினார். அது போலவே பயன்படுத்த வைரஸ் மறைந்தது. வைரஸை நீக்கிவிடுகிறோம்.

நிம்மதியாக மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கி செயல்படுத்தத் தொடங்கி விடுகிறோம். வைரஸை நீக்கும் பணி முடிந்தவுடன் அனைத்துமே முடிந்துவிடுகிறதா? முழுவதுமாகக் கம்ப்யூட்டரிலிருந்து வைரஸ் நீக்கப்பட்டுவிட்டதா? அறியாமல் வேறு டாகுமெண்ட் பைல்களை அழித்தவுடன் அது எங்காவது இருக்காதா என்று தேடி அழித்த பைல்களை மீண்டும் கொண்டு வரும் ரெகவரி புரோகிராம்கள் மூலம் பெற முயற்சிக்கிறோம் அல்லவா? அப்படியானால் இங்கு அழிக்கப்பட்ட வைரஸ் புரோகிராமும் கம்ப்யூட்டரில் தானே எங்காவது இருக்கும். இப்படி என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா? சிந்தனையே பகீர் என வயிற்றைக் கலக்குகிறது. எங்காவது ஒளிந்து இருந்து மீண்டும் வைரஸ் வந்துவிட்டால் என்ன செய்வது? இதனை எப்படி அறிவது? என்ற கேள்விகள் எழுகின்றன.

வைரஸாகச் செயல்பட்ட இ.எக்ஸ்.இ. பைல்கள் நீக்கப்பட்டாலும் அவற்றால் கம்ப்யூட்டரில் உள்ள வேறு பைல்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் அப்படியே இருக்கத்தான் செய்கின்றன. முதலாவதாக ரெஜிஸ்ட்ரி என்னும் கம்ப்யூட்டர் இயக்கத்தின் முதுகெலும்பான பைலில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பைல்கள் இயங்குவதற்கான தொடக்க நிலைகளில் வைரஸ் ஏற்படுத்திய மாற்றங்கள் அழியாமல் அப்படியே இருக்கின்றன. கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட டி.எல்.எல். மற்றும் ஐ.என்.ஐ. பைல்கள் (dll’s/inf) அப்படியே தங்கிவிடுகின்றன. இவை சும்மா இருப்பதில்லை; அவ்வப்போது இந்த பைல் இங்கு இல்லை; இதன் இயக்கத்தில் பிரச்னை உள்ளது என்று ஏதாவது தேவயற்ற பிழைச் செய்திகளைத் தந்து எரிச்சல் படுத்திக் கொண்டே இருக்கின்றன. இந்த வகையில் தற்போது இயங்கும் ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் முழுமையாகச் செயல்படுவதில்லை என்பது உண்மையே. இதற்கு நாம் தொடக்கத்திலிருந்தே சில செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவற்றைக் காணலாம்.

1. வைரஸ் கம்ப்யூட்டரில் உள்ளது என்று தெரிந்தவுடன் முதலில் நெட்வொர்க்கிலிருந்து கம்ப்யூட்டரை கழட்டிவிடுங்கள். அலுவலகத்தில் உள்ள நெட்வொர்க் மட்டுமின்றி இன்டர்நெட்டிலிருந்தும் எடுத்துவிடுங்கள். இங்கு கழட்டி விடுங்கள் என்று சொல்வது நிஜமாகவே அதன் கேபிள்களை எடுத்துவிடுவதுதான். எனவே இன்டர்நெட் இணைப்பை டிஸ்கனெக்ட் செய்தால் மட்டும் போதாது. கேபிள்களையும் எடுத்துவிடுங்கள். யு.எஸ்.பி. டிரைவ், வெளியே இருந்து இணைத்து செயல்படும் ஹார்ட் டிஸ்க்குகள், சிடி ட்ரைவில் உள்ள சிடி என அனைத்தையும் நீக்குங்கள். ஏனென்றால் இவை வழியாக உங்கள் கம்ப்யூட்டரில் புகுந்த வைரஸ் மற்ற கம்ப்யூட்டர்களுக்குச் செல்லும்.

2. இப்போது கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராமை இயக்கி கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடுங்கள். சி டிரைவ் மட்டுமல்ல; அனைத்து டிரைவ்களையும் நிதானமாக ஸ்கேன் செய்திடுங்கள். இதற்கு உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் தொடர்ந்து இன்டர்நெட் வழியாக அப்டேட் ஆகி இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவ்வாறு செய்த பிற கம்ப்யூட்டரிலிருந்து காப்பி செய்து இங்கே பயன்படுத்த வேண்டும். இது சரியாக வரவில்லை என்றால் வேறு வழியின்றி இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்தி அப்டேட் செய்து பின் இணைப்பை நீக்குங்கள்.

3. இனி ஸ்கேன் செய்கையில் ஆண்டி வைரஸ் புரோகிராம் வைரஸ்களைக் கண்டுபிடித்து கிளீன் செய்திடவா? அழிக்கவா? குவாரண்டைன் என்னும் இடத்தில் வைக்கவா? என்று கேட்கும். இதில் மூன்றாவதுதான் நல்லது. ஏனென்றால் பைல் அழிக்கப்பட்டாலும் வைரஸ் பல இடங்களில் பதுங்கி இருக்கும்.வேறு ஏதாவது செயல்பாட்டின் போது மீண்டும் இயங்கத் தொடங்கலாம். எனவே குவாரண்டைன் எனப் போட்டுவிட்டால் அது எந்நிலையிலும் இயங்காது. இதற்காக ஆண்டி வைரஸ் புரோகிராம் செட்டிங்க் செய்திடுகையில் “Always quarantine the file” என்னும்படி செட் செய்திடலாம். இதனால் குறிப்பிட்ட வைரஸ் பைலின் பெயர், அது எந்த பைலில் மாற்றங்களை மேற்கொள்கிறது என்று எளிதாகப் பார்க்கலாம்.

4. சில வேளைகளில் உங்களுடைய ஆண்டி வைரஸ் புரோகிராம் குறிப்பிட்ட வைரஸ் அல்லது வைரஸ் பாதித்த பைலை அணுக முடியவில்லை (“Access is denied”) என்று செய்தி தரலாம். அப்படியானால் அதனால் இயங்கமுடியவில்லை என்றே பொருள். உடனடியாக ஸ்கேன் செய்வதனை நிறுத்தி “boot time scan” என்ற ஸ்கேனிங் தொடங்குங்கள். இது கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்து விண்டோஸ் இயங்குமுன் இயங்கத் தொடங்கிவிடும். இதனால் வைரஸ்கள் உட்பட எந்த புரோகிராமும் இயங்காது. அதே நேரத்தில் ஆண்டி வைரஸ்புரோகிராம் தன் பணியைச் செவ்வனே செய்திடும் வாய்ப்பு கிடைக்கிறது. வைரஸ்கள் அழிக்கப்பட்ட பின் System Restore பகுதியில் அமர்ந்து கொள்ளும். பல ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் தானாக அந்த பகுதியில் சென்று வைரஸ் இருக்கிறதா என்று தேடாது. நாமாகத்தான் அதனை சிஸ்டம் ரெஸ்டோர் பகுதியிலும் தேடும்படி செய்திட வேண்டும். எனவே “boot time scan” இயக்கம் இந்த பிரச்னையைத் தீர்த்து அனைத்து பகுதிகளிலும் தேடும்.

5. ஸ்கேனிங் முடிந்துவிட்டால் உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ் எதுவும் இல்லாத நிலையை அடைந்துவிட்டது என்று பொருள். இனி குவாரண்டைன் பகுதிக்குச் சென்று எந்த மாதிரி வைரஸ் இருந்தது; அது எந்த பகுதிகளில் சேதம் விளைவித்தது என்று அறியலாம். தவறிப் போய் கூட எந்த பைலையாவது “Restore” அல்லது கட் / காப்பி / பேஸ்ட் செய்திவிடாதீர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் உங்கள் டேட்டா பைல்கள் மற்றும் புரோகிராம்கள் வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்கும். பொதுவாக இப்போது வரும் வைரஸ்கள் அழிக்கும் பணியில் இயங்காமல் உங்களிடம் உள்ள உங்கள் பெர்சனல் தகவல்கள், கிரெடிட் கார் ட் எண், பாஸ்வேர்ட் போன்றவற்றைப் பெறும் வகையிலேயே அமைக்கப்படுகின்றன.

6. வைரஸ்களை நீக்கியபின் என்ன செய்ய வேண்டும்? இனிமேல் தான் வைரஸ் ஏற்படுத்திய மாற்றங்களைக் கண்டு சரி செய்திடும் பணியினை மேற்கொள்ள வேண்டும். இப்போது வைரஸ் இல்லை என்பதால் துணிச்சலுடன் இந்த செயலில் இறங்கலாம். குவாரண்டைன் சென்று வைரஸின் பெயர் அல்லது பாதித்த பைல் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த பெயர் அல்லது அதன் அழிவு வேலை குறித்த குறிப்புகள் தாங்கி வரும் டெக்ஸ்ட்டை அப்படியே காப்பி செய்து கூகுள் அல்லது நீங்கள் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் புரோகிராம் தந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் தேடும் பகுதியில் சென்று பேஸ்ட் செய்து தேடவும். இதற்கான குறிப்புகள் விலாவாரியாகத் தரப்பட்டிருக்கும். கூகுள் வழி சென்றால் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவம் மற்றும் செம்மைப் படுத்தும் வழிகள் தரப்பட்டிருக்கும்.

7.பெரும்பாலும் ரெஜிஸ்ட்ரியில் வைரஸ் ஏற்படுத்திய வரிகளை நீக்க வேண்டியதிருக்கும். இதனை உங்களால் மேற்கொள்ள இயலாது என்று தோன்றினால் பல தளங்களில் இலவசமாக ரெஜிஸ்ட்ரி கிளீனிங் புரோகிராம்கள் கிடைக்கின்றன. அவற்றை இறக்கிப் பயன்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பைல்களை மட்டும் மீண்டும் ஸ்கேன் செய்திடலாம். பல ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் குறிப்பிட்ட சில வகை வைரஸ்களை கண்டுகொள்ளாது.

எனவே இந்நிலையில் இன்னொரு ஆண்டி வைரஸ் புரோகிராமினை இயக்குவது நல்லது. அல்லது இணையத்திலிருந்து இறக்காமல் பைல்களை ஸ்கேன் செய்து தரும் ஆன் லைன் பைல் ஸ்கேனர்களைப் பயன்படுத்தலாம். இவ்வகையில் பல இருந்தாலும் காஸ்பர் ஸ்கை ஆன்லைன் ஸ்கேனர் சிறப்பாக இயங்குகிறது. இதனை www.kaspersky.com/scanforvirus என்ற தளத்தில் பெறலாம். இறுதியாக உங்களால் நேரமின்மையோலா உங்கள் திறமை மீது நம்பிக்கை இல்லை என்றாலோ உடனே ஒரு டெக்னீஷியனை அழைத்து வைரஸ் நீக்கி பின் மற்ற பின் இயக்க வேலைகளையும் மேற்கொள்ளச் செய்யவும்.

லேப்டாப் வாங்கப் போறீங்களா?



அதிகமான விலை, கூடுதலான கவனத்துடன் கையாள வேண்டிய நிலை, தூக்கிச் செல்லும் சுமை, ஒத்துழைக்காத பேட்டரி, ஆண்மையை இழக்கச் செய்திடும் தொடர் பயன்பாடு, ரிப்பேர் ஆனால் சரி செய்ய முடியாது என்றெல்லாம் உண்மையும் பொய்மையும் கலந்த காரணங்களால் ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட லேப் டாப் கம்ப்யூட்டர்கள் இன்று பலரின் முதுகோடு முதுகாக அமையும் தோழனாக உரு மாறி அனைவரும் விரும்பும் சாதனமாக அமைந்து விட்டது.

டெஸ்க்கில் வைத்துப் பயன்படுத்துவோர் கூட இவ்வளவு பெரிய சி.பி.யூ டவர், மானிட்ட ரெல்லாம் எதற்கு? லேப்டாப்பே வைத்துக் கொள்வோமே என்று எண்ணும் அளவிற்கு லேப் டாப் என்னும் மடிக் கம்ப்யூட்டர்கள் (மடியில் வைத்து பயன்படுத்தும் மடித்து எடுத்துச் செல்லக் கூடிய கம்ப்யூட்டர்கள்) இன்று பிரபலமாகி உள்ளன.

இன்று மார்க்கட்டில் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் லேப்டாப் கம்ப்யூட்டருக்கு வரும் விளம்பரங்கள் தான் அதிகம். பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தச் சந்தையில் கூடுதல் இடத்தைப் பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. எச்.பி, டெல், தோஷிபா, சோனி, லெனோவோ, ஏசர்,காம்பேக் என பல பிராண்டுகளின் மாடல்கள் எங்களிடம் இல்லாத வசதியா என தம்பட்டம் அடிக்கின்றன. திரை அளவு, எடை மற்றும் புராசசர் ஆகியவை குறித்து பல அளவுகளைத் தெரிவிக்கின்றன. முதன் முதலாக லேப் டாப் வாங்க முடிவெடுக்கும் ஒருவர் இவர்களின் விளம்பரத்தைப் பார்த்து எந்த முடிவிற்கும் வராமல் குழப்பத்தில் ஆழ்ந்து போகிறார்.

இந்த தகவல்களை எப்படி அலசி ஆய்வு செய்து தனக்கு வேண்டிய சரியான லேப்டாப்பினை முடிவு செய்ய இயலாதவர்களாக பலர் உள்ளனர். இத்தகையவர்கள் முதலில் என்ன முடிவுகளை வரையறை செய்திட வேண்டும் எனப் பார்க்கலாம். கீழே தரப்பட்டுள்ளவை அனைத்துமே பொதுவான அனைவருக்கும் தெரிந்தது தான் நீங்கள் எண்ணினால் நல்லதை நினைத்துப் பார்ப்பது சிறந்தது என எடுத்துக் கொள்ளுங்கள்.

1. விலையும் பணியின் தன்மையும்: முதலில் இன்ன விலை என பட்ஜெட் போட்டுக் கொள்ளுங்கள். ரூ.30,000 முதல் ரூ.90,000 வரை பல மாடல்கள் உள்ளன. விலையை நிர்ணயம் செய்கையில் வரி, வாரண்டி காலம், கூடுதல் வாரண்டி என்றால் கட்ட வேண்டிய தொகை என்பதனையும் சேர்த்து கணக்கிடுங்கள். சிறிய நகரங்களில் இருந்தால் லேப் டாப் வாங்கிட பெரிய நகரத்திற்குச் சென்று திரும்பும் செலவினையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

2. வேலை என்ன? அடுத்து என்ன வேலையை இந்த லேப் டாப் மூலம் மேற்கொள்ளப் போகிறீர்கள் என்று பார்க்கவும். செலிரான் பிராசசர் கொண்ட குறைந்த மெமரி கொண்ட லேப் டாப் தேர்ந்தெடுத்து அதில் போட்டோ ஷாப் மற்றும் படங்கள் எடிட்டிங் அடிக்கடி மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால் சிரமமாகும். எனவே விலையை உங்கள் வேலையின் தன்மையை இணைத்து நிர்ணயம் செய்திடவும்.

3. அளவும் எடையும்: ஸ்கிரீன் அளவு மற்றும் எடையின் அடிப்படையில் லேப் டாப் கம்ப்யூட்டர்களை வகைப்படுத்துகின்றனர். 13,14,15 மற்றும் 17 அங்குல திரை கொண்ட லேப்டாப்கள் உள்ளன. சிறிய திரை கொண்டது எடை குறைவாக இருக்கும்; எடுத்துச் செல்வது எளிது. பேட்டரியின் லைப் வெகு நாட்கள் இருக்கும். 17 அங்குல திரை கொண்ட லேப் டாப் என்றால் செயல்பாடு நன்றாக இருக்கும். எடையும் விலையும் எடுத்துச் செல்வதும் சற்று சிக்கலாக இருக்கும். 14 மற்றும் 15 அங்குல திரை கொண்ட லேப் டாப்கள் இவற்றை அட்ஜஸ்ட் செய்து போவதாக இருக்கும்.

4. பிராசசிங் திறன், ஹார்ட் டிஸ்க் அளவு,மெமரி மற்றும் கிராபிக்ஸ் திறன்: இன்டெல் ஒவ்வொரு ஆறு மாத காலத்தில் ஏதேனும் ஒரு புதிய சிப் பிராசசரை அறிமுகப்படுத்துகிறது. குறைந்தது டூயல் கோர் சிப் லேப்டாப்பில் இருக்கவேண்டும். எனவே இன்டெல் நிறுவனத்தின் டூயல் கோர் 2 சிப் அல்லது ஏ.எம்.டி. எக்ஸ்2 பிராசசர் இருக்க வேண்டும். சிங்கிள் கோர் பிராசசர் என்றால் ஏற்றுக் கொள்ளவே வேண்டாம். அவை எல்லாம் காலாவதியாகி விட்டன. அடுத்து எந்த அளவில் ஹார்ட் டிஸ்க் இருக்க வேண்டும். பட்ஜெட் விலையில் கிடைக்கும் லேப்டாப்களில் கூட 160 ஜிபி ஹார்ட் டிஸ்க் உள்ளது. பலருக்கு இது போதுமானது. எனவே உங்கள் லேப்டாப்பில் குறைந்தது இது இருக்க வேண்டும். அடுத்ததாக ராம் மெமரி; பல லேப் டாப்களில் இது 1 ஜிபியாக இருக்கிறது. ஆனால் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாட்டிற்கு இது சரியாக அமைய வில்லை. எனவே 2 ஜிபி சிஸ்டம் மெமரி உள்ளதாகப் பார்க்கவும்.

டிஸ்கிரீட் கிராபிக்ஸ் (Discrete Graphics): என்வீடியா மற்றும் ஏ.டி.ஐ (Nvidia’s/ATI) வழங்கும் கிராபிக்ஸ் வசதிகளை இந்த சொற்களால் குறிப்பிடுகின்றனர். இதில் என்வீடியா தான் இன்றைக்கு முன்னணியில் உள்ளது. இன்டெல் நிறுவனம் தரும் இன்டக்ரெய்டட் சொல்யூசன்ஸ் சாதாரண கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு மட்டுமே சரியாக இருக்கும்.

5.பேட்டரியின் திறன்: பொதுவாக பேட்டரிகளை அது கொண்டுள்ள செல்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அளவிடுவார்கள். 4 செல் கொண்ட பேட்டரி லேப் டாப்பின் எடையை வெகுவாகக் குறைத்துவிடும்; ஆனால் பேட்டரி லைப் மிகவும் குறைந்துவிடும். 9 செல் பேட்டரி எடையை மிக அதிகமாக்கும். ஆனால் அந்த அளவிற்கு செயல் திறன் பெரிய அளவிலான வேறுபாட்டில் இருக்காது. எனவே 6 செல்கள் கொண்ட பேட்டரி தான் அனைவரும் விரும்பும் பேட்டரியாகவும் பல லேப்டாப்கள் கொண்டதாகவும் உள்ளது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இரண்டரை மணி நேரம் லேப்டாப்பைப் பயன்படுத்தலாம்.

6. மற்றவற்றுடன் தொடர்பு: இது பல வகை தொடர்பினை உள்ளடக்கியது. யு.எஸ்.பி., ஈதர்நெட் மற்றும் பயர்வயர். பெரும்பாலான லேப்டாப் கம்ப்யூட்டர்கள் ஸ்டாண்டர்டாக சிலவற்றை ஒருங்கிணைந்த வடிவமைப்பில் தருகின்றனர். இருப்பினும் 3 யு.எஸ்.பி. போர்ட் உள்ளது மிக நல்லது. அத்துடன் விஜிஏ / டிவிஐ (VGA/DVI) போர்ட் இருக்க வேண்டும். வயர்லெஸ் கனெக்டிவிடி பக்கம் பார்த்தால் 802.11 a/b/g கட்டாயமாகத் தேவை. இதனை 802.11n க்கு மேம்படுத்த முடியும் என்றால் நிச்சயம் அதனையே கேட்கவும். இதனால் ஸ்பீட் அதிகமாகக் கிடைக்கும். புளுடூத் 2.0 ஈ.டி.ஆர். தரப்படுவதும் நல்லது. இதன் மூலம் போன் போன்ற சாதனத்துடன் பைல்களைப் பரிமாறுவது எளிதாகும்.

7. வாரண்டி: அனைத்து லேப்டாப்களும் குறைந்தது ஓராண்டு வாரண்டி தருகின்றனர். இது ரிப்பேர் மற்றும் தயாரிப்பில் காணப்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்கின்றன. இந்த காலத்திற்குப் பின் பிரச்னை வந்து ரிப்பேர் செய்திடப் போனால் எக்கச் சக்க செலவாகிறது. இந்த அதிர்ச்சி பின்னாளில் ஏற் படாமல் தடுக்க நீட்டிக் கப்பட்ட வாரண்டி தருவதாக இருந்தால் கேட்டு வாங்கவும். அல்லது தொடக்க வாரண்டியே மூன்று ஆண்டுகள் இருந்தால் கேட்டு வாங்கலாம்.

சரி வாங்கிவிட்டீர்களா! அடுத்து என்ன செய்திட வேண்டும்?

1. கிராப் வேர்களை (crapware) நீக்குங்கள்: முதல் முதலில் உங்கள் லேப்டாப்பினை இயக்கத் தொடங்கியவுடன் நிறைய சோதனை புரோகிராம்கள், தேவையற்ற பவர் மேனேஜ் மெண்ட் புரோகிராம்கள், புரடக்டிவிடி டூல்ஸ் என்ற பெயரில் நமக்கு என்றும் பயன்படாத புரோகிராம்கள் எல்லாவற்றையும் கம்ப்யூட்டர் தயாரிப்பாளருக்கு பிடிக்கும் என்பதால் மொத்தமாகப் பதிந்திருப்பார்கள். இவை அனைத்தையும் அன் இன்ஸ்டால் செய்து நீக்கி விட்டு உங்களுக்குப் பிடித்த புரோகிராம்களை மட்டும் இன்ஸ்டால் செய்திடவும்.

2. பேட்டரி பராமரிப்பு: பொதுவாக லேப்டாப் பேட்டரிகள் எல்லாம் எப்படி பயன்படுத்தினாலும் சரியாகவே இயங்கும். எளிதாக வீணாகிப் போகாது. இருந்தாலும் இவை கெட்டுப் போகாமல் இருக்க 2அல்லது திறன் இழக்காமல் இருக்க குறிப்பிட்ட கால கட்டத்தில் பேட்டரியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்திட வேண்டும். மேலும் ஓரடியாக பேட்டரியை சார்ஜ் செய்திடக் கூடாது. நீங்கள் லேப் டாப் பயன்படுத்த வில்லை என்றால் மெயின் பிளக்கிலிருந்து பேட்டரிக்கான கனெக்ஷனை எடுத்துவிட வேண்டும்.

மேலே கூறப்பட்டவை எல்லாம் சில அடிப்படை செய்திகளே. எந்த ஒரு லேப் டாப் வாங்குவதாக இருந்தாலும் அவற்றின் திறன் கொண்ட மற்ற லேப் டாப்களுடன் ஒப்பிட்டு, பயன்பாடு குறித்து அவற்றின் இணையதளங் களில் தகவல்கள் தேடி பின் வாங்கவும். வாங் குவதற்கு முன் லேப் டாப் விற்பனை செய் பவரின் நிறுவனமும் நிலையானதுதானா என்று பார்க்கவும். அல்லது இணைய தளங்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் அத்தாட்சி பெற்ற முகவர்களின் முகவரிகள், அதே நிறுவனங்களின் கிளைகள் பட்டியல் இருக்கும்.

அவற்றை பெற்று தொடர்பு கொண்டு வாங்கலாம். லேப் டாப் கம்ப்யூட்டர்களை பெர்சனல் கம்ப்யூட்டர்களை ரிப்பேர் நாம் பழுது பார்ப்பது போல பார்க்க முடியாது. மிக நுண்மையான சாதனமாகும். எனவே ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் நீங்களே கையாளும் எண்ணத்தை விட்டுவிட்டு அதற்கான் நிறுவன அலுவலகத்திற்குச் செல்லவும். தகுதி கொண்ட டெக்னீஷியனிடம் மட்டுமே காட்டவும்.

இ மெயில் கடிதங்களை அழகாக அமைத்திட இமெயில் ஸ்டேஷனரி



இமெயில் கடிதங்களை மிகவும் அழகாகவும் படங்கள் நிறைந்ததாகவும் அமைத்திட அவுட்லுக் மற்றும் தண்டர் பேர்ட் போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் பல வசதிகளை நமக்கு அளித்துள்ளன. இதைப் பார்த்து பயன்படுத் திய சிலர் ஏன் நாம் எடுத்த போட்டோக்களை அல்லது ரசித்த படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற வினாவினை எழுப்புகின்றனர்.

ஏனென்றால் அவ்வாறு நாம் விரும்பும் படங்களை அமைக்கும்போது மெயில்கள் இன்னும் பெர்சனலாகத் தோற்றம் அளிக்கும். எடுத்துக் காட்டாக அவுட்லுக் எக்ஸ்பிரஸ் புரோகிராமில் சூரிய காந்தி பூ ஒன்று அழகாகத் தரப்படுகிறது. எனக்கு வந்த இன்னொரு மெயிலில் என் நண்பன் அதே போன்ற மிக அழகான மலரின் படம் ஒன்றை ஸ்டேஷனரியில் அமைத்து அனுப்பி இருந்தான். வேறு ஒரு நண்பர் தன் மெயிலில் உள்ள செய்திகளுகேற்ப படங்களைத் தேடி எடுத்து எடிட் செய்து அனுப்புகிறார். இவர்களின் செயலைப் பார்க்கும் போது நாம் தயாரிக்கும் படங்களை அழகாக இணைக்கலாம் என்று தோன்றியது. அதற்கான வழிகளையும் பார்க்க நேரிட்டது. இதோ அவை உங்களுக்காக. முதலில் நீங்கள் விரும்பும் படத்தை ஒரு பைலாக கம்ப்யூட் டரில் வைத்திருக்க வேண்டும்.

இதனை நீங்கள் எடுத்த டிஜிட்டல் கேமரா விலிருந்தும் பிளாஷ் டிரைவிலிருந்தும் மாற்றலாம். எப்படி இருந்தாலும் அதனை ஒரு டிஜிட்டல் பைலாக உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்திட வேண்டும். அப்போது தான் அதனை இமெயில் ஸ்டேஷனரியில் பயன்படுத்த முடியும். இதை முடித்த பின் உங்கள் இமெயில் புரோகிராமினைத் திறக்கவும். கீழே தரப்படும் குறிப்புகள் தண்டர்பேர்ட், அவுட்லுக் எக்ஸ்பிரஸ் மற்றும் எம் எஸ் அவுட்லுக் ஆகியவற்றிற் கானது. யாஹூ மற்றும் ஹாட் மெயில் போன்ற வெப் அடிப்படையிலான இமெயில் புரோகிராம் கள் இது போன்ற ஸ்டேஷனரி வசதிகளைத் தருவதில்லை. ஓகே! இங்கு குறிப்புகளைப் பார்ப்போம்.

அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் Tools, Options சென்று Compose டேபைக் கிளிக் செய்திடவும். அடுத்து Create New என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது “New Stationery” என்ற விஸார்ட் மேலெழுந்து வரும். உடனே Next என்பதில் கிளிக் செய்திடுக. அப்படியே அதனைத் தொடர்ந்து கிளிக் செய்து கொண்டே போகவும்.

அப்போது உங்களுடைய படங்களை நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைத் தேர்ந்தெடுக் கலாம். அப்போதுதான் நமக்கு வெரைட்டி கிடைக்கும். இப்போது Create Mail என்பதன் அருகே உள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தக் கிடைக்கும் கட்டத்தில் Select Stationery என்பதில் கிளிக் செய்திடவும். பின் நீங்கள் விரும்பும் படத்தினை பட் டியலில் பார்க்கலாம். உடனே ஓகே கிளிக் செய்தால் அந்த படம் மெயிலில் பயன்படுத்தத் தயாராய் இருக்கும்.

தண்டர்பேர்ட் இமெயில் புரோகிராமில் Write பட்டனை அழுத்தினால் புதிய இமெயில் ஒன்றை தயாரிக்க நீங்கள் தயாராய் இருப்பீர்கள். இனி இமெயில் கடிதம் ஒன்றின் மெயின் பகுதியில் கிளிக் செய்திடுங்கள். பின் Format, Page Colors and Background அழுத்திடவும். பின் File மெனுவிற்குச் செல்லவும். அதன்பின் நீங்கள் பயன்படுத்த விரும்பும் படம் உள்ள பைலைத் தேர்ந்தெடுக்கவும்.

பின் Open மற்றும் OK இல் கிளிக் செய் திடவும். இப்போது அனைத்தும் தயாராகி விட்டது. நீங்கள் விரும்பும் படத்துடன் இமெயில் கடிதத்தினைத் தயாரிக்கலாம். ஒன்றல்ல ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைக் கூட இதில் ஒரே மெயிலில் பயன்படுத்தலாம். இதுவே எம்.எஸ். அவுட்லுக் புரோகிரா மாக இருந்தால் முதலில் நீங்கள் எச்.டி.எம். எல். பார்மட்டில் இமெயிலை அனுப்புவ தனை உறுதி செய்திட வேண்டும். பின் புதிய இமெயில் மெசேஜ் அனுப்பு வதற்கான வழி முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதன்பின் Format, Background, Fill Effects என்றபடி செல்லவும். இதில் கிடைக்கும் டேப்களில் Picture டேப் கிளிக் செய்திடவும். பின் கிடைப் பதில் Select Picture என்ப தனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பட பைலைத் தேர்ந் தெடுத்து இடைச் செருகலாச் செருகலாம். அதன்பின் ஓகே கிளிக் செய்து வெளியேறலாம். அவ்வளவுதான். வழிகளைக் கற்றுக் கொண்டீர்களா! இனி நீங்களாக உங்களுக்குப் பிடித்த போட்டோ மற்றும் படங்களை இமெயிலுடன் இணைத்து உங்கள் மெயிலுக்கு ஒரு தனித்துவம் தரலாம். ஆனால் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும்.

முழுப் படத்தையும் நீங்கள் உங்கள் மெயிலில் வைத்திடுகையில் அதன் வண்ணங்கள் உங்கள் மெயிலில் உள்ள எழுத்துக்களைப் படிக்க இயலாத வகையில் மறைக்கலாம். அதற்காக உங்கள் கடித டெக்ஸ்ட்டை மிகவும் அழுத்தமான எழுத்து வகையில் அமைக்க வேண்டியதிருக்கும். இதுவும் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் சிரமமாக இருக்கலாம். எனவே படத்தினை முன்னதாகவே இளம் வண்ணத்தில் பிரைட்னஸ் குறைத்து எடிட் செய்து வைக்கலாம்.

மேலும் அனைத்து இமெயில்களுக்கும் இது போல படத்தை இணைத்தால் அது படத்தின் சிறப்பினை குறைத்துவிடும். உங்கள் நண்பர்கள் இவனுக்கு வேறு வேலை இல்லையா? என்று எண்ணத் தொடங்கலாம். எனவே குறிப்பிட்ட சில வேளைகளில் மட்டும், உங்களுடைய மற்றும் உங்கள் நண்பர்களுடைய பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்கள், உங்கள் வெற்றி அல்லது பதவி உயர்வு குறித்த கடிதங்கள் போன்ற சில வற்றில் மட்டும் படங்களைப் பயன்படுத் துவது அதற்கு ஒரு பொருளைத் தரும்.

ஸ்கிரீன் சேவருக்கு பாஸ்வேர்ட் செட் செய்யலாமா?



ஸ்கிரின் சேவருக்கு பாஸ்வேர்ட் எப்படி செட் செய்வது? எதற்காக செட் செய்திட வேண்டும்? என்ற கேள்வி உங்கள் மனதில் எழுகின்றது. இதனைப் பல வாசகர்கள் கேட்டுள்ளதால் இங்கு அதற்கான தகவல்களைத் தந்துவிடு வோம்.

இது மிகவும் எளிய ஒரு வேலைதான். முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுத்து இயக்கத்திற்குக் கொண்டு வரவும்.

இங்கு டிஸ்பிளே ஐகானைக் கண்டு பிடித்து கிளிக் செய்திடுங்கள். (விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவராக இருந்தால் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருப்பதனை உறுதி செய்திடல் வேண்டும். அப்போது தான் டிஸ்பிளே ஐகான் பார்ப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் கிடைக்கும். கிளாசிக் வியூ அமைத்திட கண்ட்ரோல் பேனலின் இடது பக்கம் இருக்கும் பிரிவில் அதற்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும். அதனை கிளிக் செய்தால் போதும்) இனி உங்கள் முன் இருக்கும் விண்டோவில் ஸ்கிரீன் சேவர் என்ற டேபை அழுத்தவும்.

இதில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஸ்கிரீன் சேவரைத் தேர்ந்தெடுக்கவும். அப்போதே நீங்கள் எவ்வளவு நேர அவகாசத்தில் கம்ப்யூட்டரில் பணி ஏதும் இல்லை என்றால் ஸ்கிரீன் சேவர் தோன்ற வேண்டும் என்பதனையும் அங்கு செட் செய்திடலாம். நீங்கள் விண்டோஸ் 95, 98, ME, NT அல்லது 2000 பயன்படுத்துபவராக இருந்தால் “Password protected” என்று இருக்கும் கட்டத்தில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

பின் ஸ்கிரீன் சேவருக்கென ஒரு பாஸ்வேர்டை அமைக்கவும். ஏற்கனவே அமைத்திருந்தால் அருகே உள்ள பட்டனைக் கிளிக் செய்து பாஸ்வேர்டை மாற்றலாம். நீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவ ராக இருந்தால் நீங்கள் லாக் இன் ஸ்கிரீனில் என்ன பாஸ்வேர்ட் பயன்படுத்தி உள்ளே நுழைந்தீர்களோ அதனையே பயன்படுத்தலாம். ஆனால் அதுபோல எந்த பாஸ் வேர்டும் தராமல் விண்டோஸ் இயக் கத்தைப் பயன்படுத் தும் பழக்கம் உடையவராக இருந்தால் பாஸ்வேர்ட் ஒன்றை உருவாக்க வேண் டும்.

அவ்வாறு அமைத்த பின் மீண்டும் டிஸ்பிளே ஐகான் சென்று ஸ்கிரீன் சேவர் டேபை அழுத்தி அங்கு “On resume, display Welcome screen” என்று இருக்கும் இடத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இந்த ஏற்பாடுகளைச் செய்துவிட்டால் நீங்கள் குறிப்பிட்ட நேரம் எந்த பணியும் மேற்கொள்ளாமல் கம்ப்யூட்டரை வைத்திருந்தால் ஸ்கிரீன் சேவர் தோன்றும். பின் அதற்கு பாஸ்வேர்ட் கொடுத்தால் தான் உள்ளே நுழைய முடியும். இதுவும் ஒரு பாதுகாப்பு வழிதான்.